படத் தலைப்புகளால் ஈர்த்து தமிழ்சினிமாவிற்கு புதிய பாதை போட்ட வித்தகன் இவர் தான்…!

தமிழ்த்திரை உலகில் இவர் ஒரு வித்தகன். படத்தின் பெயரிலேயே இவர் ரசிகர்களை ஈர்த்து விடுவார். இவர் எந்த ஒரு செயலில் இறங்கினாலும் அதில் ஒரு புதுமையை செய்வார். இவரது கவிதை தொகுப்புக்கு இவர் இட்ட பெயர் கிறுக்கல்கள். இந்த நபர் தனி ஒருவனாக தமிழ்த்திரை உலகிற்கு புதிய பாதையை போட்டார்.

அவர் வேறு யாருமல்ல. ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் நடிகர் மட்டுமல்ல. இயக்குனரும் கூட. தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் பாக்யராஜ் தான் இவரது குருநாதர். இப்போது பார்த்திபன் தனது படங்களுக்கு ஒரு உவமையைத் தலைப்பாக வைத்திருப்பார். அதை வாசித்ததும் கொஞ்ச நேரம் யோசிக்கத் தோன்றும். அப்படி வைத்த வித்தியாசமான டைட்டில்களைப் பற்றியும் அவை வெற்றி பெற்றனவா என்பது குறித்தும் பார்ப்போம்.

பொண்டாட்டி தேவை

Pondatti Thevai
Pondatti Thevai

யாராவது இப்படி ஒரு தலைப்பைத் தைரியமாக வைப்பார்களா? அது பார்த்திபனால் மட்டுமே முடியும். படத் தலைப்பை துணிந்து வைத்ததைப் போல படமும் அதிரி புதிரி வெற்றி பெற்றது. பொண்ணு தேவை…, மணமகள் தேவை என்பதைத் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் பொண்டாட்டி தேவை என்பதை இப்போது தான் பார்க்கிறோம். படத்தலைப்பு தான் இவரது வெற்றிக்கு வித்திடுகிறது என்று சொன்னால் அதற்கு சிறந்த உதாரணம் இந்தப் படம்.

1990ல் பார்த்திபன் நடித்து இயக்கிய படம். இவரது ஜோடி அஸ்வினி. சிந்து, கமலா காமேஷ், இடிச்சபுளி செல்வராஜ், கேயார், குமரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் பார்த்திபன் பஸ் கண்டக்டராக நடித்து இருந்தார். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

குடைக்குள் மழை

kudaikul malai
kudaikul malai

2004ல் பார்த்திபன், நடித்து தயாரித்து, இயக்கிய படம். மதுமிதா, ஸ்ரீமன், தீபா வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். குடைக்குள் எப்படிப்பா மழை பெய்யும் என்று கேள்வி கேட்க நினைப்பவர்கள் தாராளமாகப் படத்தைப் பார்க்கலாம். இதற்கும் படத்தில் ஒரு விடை இருக்கும். முதலில் இந்தப் படத்திற்கு நீ + நான் என்று தான் வைக்கப்பட்டது.

கண்ணாடி பூக்கள்

Kannadi Pookkal
Kannadi Pookkal

2005ல் ஷாஜஹான் இயக்கத்தில் பார்த்திபன் நடித்த படம். காவேரி, சரத்பாபு, ஆனந்த் ராஜ், நிழல்கள் ரவி, பிரமிட் நடராஜன், பொன்னம்பலம் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

இரவின் நிழல்

Iravin Nizhal
Iravin Nizhal

இரவுக்கு எப்படிடா நிழல் வரும்? ரொம்ப கஷ்டமான கேள்வியா இருக்கே? அப்படின்னா என்ன சொல்லிருப்பாரு? அப்படின்னு கேள்விகள் எழலாம். இவங்க எல்லாரும் இந்தப் படத்தைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

ஒத்த செருப்பு

ஒத்த செருப்பு அளவு 7 இதுதான் படத்தோட பெயர். பார்த்திபனே நடித்து இயக்கி விட்டார். சந்தோஷ் நாராயணனும், சத்யாவும் இசை அமைத்துள்ளனர். இது பார்த்திபனின் சொந்தக் கதை. படத்தின் தரம் தேசிய விருதை வென்றது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இந்த ஒத்த செருப்ப யாராவது போட முடியுமா? இதெல்லாம் நடக்குற காரியமா? அப்படின்னு கேட்குறவங்க படத்தைப் பாருங்க.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews