விஜய் ரசிகர் அளித்த புகாரால் கதறிய அஜீத் ரசிகர்.. மன்னிப்பு வீடியோ வெளியிட்டதால் சாந்தமான விஜய் ரசிகர்கள்

எம்.ஜி.ஆர்.- சிவாஜி காலந் தொட்டே தமிழ்சினிமாவில் ரசிகர்கள் சண்டை ஓய்ந்த பாடில்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு அடுத்தபடியாக ரஜினி-கமல் ரசிகர்கள் மோதல்.. அடுத்து விஜய்-அஜீத் ரசிகர்கள், அதற்கு அடுத்து விக்ரம்-சூர்யா, தனுஷ்-சிம்பு, தற்போது விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன் என வளர்ந்து நிற்கிறது.

தங்கள் அபிமான நடிகர் படம் ஓடினால் சரியாகப் போகாத போட்டி நடிகரின் படங்களை கலாய்ப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது, திரையரங்குகளில் பட்டாசுகள் வெடிப்பது, பால் அபிஷேகம் செய்வது, கட் அவுட் வைக்கிறேன் என்று கை, காலை உடைத்துக் கொள்வது போன்ற பல விரும்பத் தகாத செயல்களைச் செய்து அவர்களின் பெயர்களையும் கெடுக்கின்றனர்.

இவ்வாறு செய்ய வேண்டாம் பல நற்பணிகளைச் செய்யுங்கள் அவர்கள் பிழைப்பைப் பாருங்கள். படத்தினை ரசியுங்கள் என்று ஹீரோக்கள் எத்தனை முறை சொன்னாலும் அவர்கள் திருந்தியபாடில்லை. இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வசூலிலும் கில்லி சாதனை படைத்தது. இதனைக் விஜய் ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். தற்போது திரையரங்குகளில் கில்லி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் நேற்றைய தினம் மே.1 அஜீத் பிறந்த நாள் அன்று அவரின் தீனா படம் மீண்டும் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது.

மறைந்தது ஆனந்த ராகம்.. பூபாளம் இசைத்த பூங்குயில் உமாரமணன் மறைந்த சோகம்

இந்தப் படத்தினை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் நேற்று சென்னை காசி திரையரங்கில் கில்லி படமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் வழக்கம் போல் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கில்லி படத்தின் பிளக்ஸ் பேனரைப் பார்த்த எபினேஷ் என்ற அஜீத் ரசிகர் ஒருவர் திடீரென கட்அவுட்டில் ஏறி அதனைக் கிழிக்க ஆரம்பித்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த விஜய் ரசிர்கள் அதை செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்து காவல் துறையில் எபினேஷ் மீது புகார் அளிக்க, காவல் துறையினர் அவர் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எபினேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரிடம் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என மன்னிப்பு கேட்டு வீடியோவாகப் பதிவு செய்து அதனை வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...