2011 சச்சின், 2024 கோலி.. இரண்டு பேர் ஜெயிச்ச வேர்ல்டு கப் பின்னாடி இருந்த சூப்பரான ஒற்றுமை..

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் இருந்தது போல தற்போது ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீரராக இருந்து வருபவர் தான் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி என கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் பல அரிய சாதனைகளை தன் பெயருக்கு பின்னால் வைத்துள்ளார். அவர் ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்திய போது அவரைப்போல ஒரு வீரர் இனி உருவாக முடியுமா என்ற கேள்வி தான் இருந்தது.

ஆனால் அதனை தனது பேட்டிங் மூலம் மிகச் சிரிப்பாக வெளிப்படுத்தி சச்சினின் பல சாதனைகளை நிச்சயம் சர்வதேச ரன்களில் முறியடிப்பார் என்ற பல கிரிக்கெட் ஜாம்பவான்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் வீரர் தான் கோலி. சச்சினை போலவே கிரிக்கெட் அரங்கில் ஆபத்தான பந்து வீச்சாளர்களை மிக எளிதாக எதிர்கொண்டு ரன் சேர்க்கும் திறன் படைத்த கோலி, இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளில் நிறைய சாதனைகளை தனது பேட்டிங் மூலம் படைத்துள்ளார்.

சச்சினுக்கு நிகராக தற்போது நவீன கிரிக்கெட் காலத்தில் இருக்கும் விராட் கோலி பல போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி சச்சினை போல பல சாதனைகளை கோலி படைத்திருந்தாலும் ஐசிசி டி20 கோப்பையை மட்டும் வெல்ல முடியாமலே தொடர்ந்து இருந்து வந்தது.

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வென்ற போது கோலி அந்த அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனாலும் அவர் முன்னணி வீரராக மாறத் தொடங்கியதன் பின்னர் எந்த ஐசிசி கோப்பையும் அவரால் வெல்ல முடியவில்லை. பல ஐசிசி டி20 தொடர்களில் தனது பேட்டிங் மூலம் நிறைய ரன்களை கோலி குவித்திருந்தாலும் கோப்பையை நெருங்க முடியவில்லை. அதே போல, ஐபிஎல் தொடரில் கூட அவர் 17 ஆண்டுகளாக ஆடிவரும் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியாமல் தான் இருந்து வருகிறது.

கோலி போன்ற ஒரு வீரராக டி20 உலக கோப்பையை மட்டும் ஏனோ சொந்தம் கொண்டாட முடியாமல் இருந்த வந்த நிலையில் தான் அதனை தற்போது வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் அவர் விளங்கி உள்ளார். சச்சின் கூட 1989 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அவர் முதல் உலகக் கோப்பை வென்றது 2011 ஆம் ஆண்டு தான்.

அதற்கு முன்பாக 2003 ஆம் ஆண்டு இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்திருந்தது. ஏறக்குறைய சச்சின் ஓய்வு பெறும் காலத்தில் இருந்த போதுதான் உலகக் கோப்பையை தனது ஆறாவது ஐசிசி தொடரில் கைப்பற்றி இருந்தார்.

இதனிடையே, தற்போது அவரைப் போலவே கிரிக்கெட் உலகில் பார்க்கப்பட்டு வரும் விராட் கோலியும், தனது முதல் டி20 உலக கோப்பையை ஆறாவது ஐசிசி டி20 தொடரில் தான் சொந்தம் கொண்டாட முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.