கேப்டனா இதை மட்டும் அவரு செய்யவே இல்ல.. டி20 ஃபைனலில் ரோஹித்தோட இந்த திறமையை கவனிச்சீங்களா..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்ற பெயரை ரோஹித் ஷர்மா எப்போதோ எடுத்துவிட்டார். ஆனாலும் அவரது தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பையை மட்டும் வெல்லாமல் இருந்து வந்தது கருப்பு பக்கங்களில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. தோனி தலைமையில் மூன்று ஐசிசி தொடர்களை இந்திய அணி வென்ற பின்னர் அதனை தொட்டு பார்க்க முடியாமல் தவித்து வந்த சூழலில் மிகச்சிறப்பாக தலைமை தாங்கி தற்போது டி20 உலக கோப்பை வெல்லவும் ரோஹித் ஷர்மா முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

கடந்த 2002 – 03 ஆகிய ஆண்டுகளின் போது இந்திய அணியை தலைமை தாங்கி இருந்த சவுரவ் கங்குலி, தொடர்ச்சியாக மூன்று ஐசிசி தொடர்களின் இறுதி போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட், தோனி, கோலி உள்ளிட்ட பலரும் இந்திய அணியை தலைமை தாங்கி வந்தாலும் ரோஹித் சர்மா தான் அதே மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தி காட்டி இருந்தார்.

கிட்டத்தட்ட 12 மாத இடைவெளியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முன்னேற்றம் கண்டிருந்த இந்திய அணி, அடுத்ததாக ஒரு நாள் உலக கோப்பையின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தது. இந்த இரண்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் தோல்வி அடைய தற்போது மூன்றாவது முறையாக தொடர்ந்து டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் முன்னேற்றம் கண்டது.

ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து ஆடி இருந்த இந்திய அணியின் கையில் போட்டி இல்லாமல் இருந்தது போல் தான் தோன்றியது. ஆனால் இந்த தொடர் முழுக்க மாயாஜாலம் காட்டிய இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய அணி உலக கோப்பையை வெல்ல அதனை நிகழ்த்திக் காட்டி இருந்தனர். இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற்று கோப்பையும் சொந்தமாகி உள்ளது.

இந்த வெற்றியை தற்போது ஒட்டுமொத்த இந்திய மக்கள் கொண்டாடிவரும் நிலையில் ரோஹித் ஷர்மா, கோலி ஆகிய இருவரும் டி20 தொடர் சர்வதேச போட்டியில் இருந்து தங்களின் ஓய்வினை அறிவித்துள்ளனர். பல நாள் கனவு நிறைவேறியது போல இருவரும் உணர்ந்து எமோஷனலாகவும் விடை பெற்றிருந்த நிலையில் தற்போது ரோஹித் ஷர்மா தக்கவைத்த பெருமையை பற்றி பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல முறை கோப்பையை கேப்டனாக கைப்பற்றி கொடுத்துள்ள ரோஹித் சர்மா, தற்போது இந்திய அணிக்காகவும் ஒரு டி20 கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அப்படி ஒரு சூழலில், ரோஹித் ஷர்மா இதுவரை ஆடியுள்ள 8 டி20 இறுதி போட்டியிலும் அவரது அணி தான் வெற்றி பெற்றுள்ளது.

ஒருமுறை கூட கேப்டனாகவும், வீரராகவும் டி20 தொடரின் இறுதி போட்டியில் தோல்வியே சந்திக்காமல் இருக்கும் ரோஹித்தை பலரும் மனதார பாராட்டியும் வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...