ரோஹித், கோலி ரிட்டயர்டு ஆகிப் போறதுல இப்படி ஒரு சாதனையா.. உண்மையாவே 2 பேரும் கோட் தான்..

Published:

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பயை கைப்பற்றியதும் அனைவரும் உற்று நோக்கியது ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோரை தான். இவர்கள் இருவருமே என்ன பேச போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தது. இன்னொரு பக்கம் அவர்கள் இருவரும் 35 வயது தாண்டி இருந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடருடன் குறைந்த ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவார் என்ற ஒரு ஊகமும் கடந்த பல மாதங்களாக இருந்து வந்தது.

ஒருவேளை தோல்வியடைந்தால் கூட அவர்கள் அந்த ரூட்டை மாற்றி இருக்கலாம் என்ற நிலையில், டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றதும் இந்த இரண்டு பேருமே அடுத்தடுத்து தங்களின் ஓய்வினையும் அறிவித்திருந்தனர். ரசிகர்களே ஓரளவுக்கு எமோஷன் ஆகி இருந்தாலும் அவர்கள் இந்த டி20 உலக கோப்பை வென்று அப்படி ஒரு அசத்தலான தருணத்துடன் ஓய்வு பெற்றதற்காகவே இது ஒரு சிறந்த முடிவு என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அரை இறுதி போட்டியில் ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் கலக்க இறுதி போட்டியில் இதுவரை ஆடாமல் இருந்த விராட் கோலி சிறப்பாக ஆடி இந்திய அணியை மீட்டு எடுத்திருந்தார். இப்படி இரு துருவங்களாக இந்திய அணியில் கருதப்பட்டு வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர், கோப்பையை வென்ற பின்னர் அதனுடன் சேர்ந்து ஒன்றாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

அத்துடன் இந்த இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் நட்பின் இலக்கணமாக பல பாடல்களையும் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் வெளியிட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே தற்போது டி 20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் இத்தனை நாளில் தக்க வைத்துள்ள சாதனைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர், அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர், அதிக சராசரி என மூன்றையும் வைத்துள்ள வீரராக கோலி தற்போது ஓய்வினை அறிவித்துள்ளார். இதே போல ரோஹித் ஷர்மாவும் டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகள் வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையுடன் டி20 சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார்.

இப்படி இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்கள் முக்கியமான சாதனைகளுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அதை மற்ற வீரர்கள் நெருங்குவதற்கு சில காலம் எடுத்துக் கொள்ளும் என்று தான் தெரிகிறது.

மேலும் உங்களுக்காக...