அக்சர், குல்தீப் பாத்தாச்சும் கத்துக்கோங்க.. ஹர்பஜனுக்கு பிறகு டி20 உலக கோப்பையில் ஜடேஜா செஞ்ச மோசமான சாதனை..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பையை கைப்பற்றி பட்டைய கிளப்பி பல்வேறு சாதனைகளை தங்கள் பெயருக்கு பின்னால் உருவாக்கி உள்ளது. ஆனால், அதே வேளையில் ஒரு சில தவறுகள் இந்த தொடர் முழுக்க தொடர்ந்து இருந்ததை நிச்சயம் தவிர்க்க முடியாதது தான். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் இடம்பிடித்திருந்த போதிலும் அவர்களுக்கான வாய்ப்பு ஒரு போட்டியில் கூட கிடைக்கவில்லை.

சுழற்பந்து வீச்சில் ஜடேஜா தொடர்ந்து சொதப்பி இருந்த போதிலும் அவருக்கு பதிலாக சாஹலுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு தான் வந்தார். இதேபோல ஐபிஎல் துறையில் பெரிதாக கலக்கியிருந்த ஷிவம் துபேவால் ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்த முடிந்திருந்தது.

ஆல் ரவுண்டரான அவர் பெரும்பாலான போட்டிகளில் பந்து வீசாமல் போக, ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தான் இந்த டி20 உலகக் கோப்பையில் ஆடி இருந்தார். முன்னதாக, நல்ல பினிஷராக டி20 உலக கோப்பையில் ஆடி வந்த ரிங்கு சிங் இடத்தில் தான் ஷிவம் துபேவை இந்திய அணி தேர்வு செய்திருந்தது. இந்த முடிவே அந்த சமயத்தில் பெரிதாக எதிர்ப்புகளை உருவாக்க, அதைத் தாண்டி ஷிவம் துபே பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இருந்தாலும் இந்திய அணி தற்போது வெற்றி பெற்று விட்டதால் இது பெரிய அளவில் பேசப்படவில்லை. இதேபோல மற்றொரு பிரச்சனையாக இருந்தது ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் திறன். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே ஒரு முறை கூட ஜொலிக்காத அவர், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மட்டும் கடைசி கட்டத்தில் ரன் சேர்த்திருந்தார்.

பேட்டிங்கை விட பந்துவீச்சில் பலமாக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, இந்த முறை 6 போட்டிகளில் ஆடி வெறும் ஒரே ஒரு விக்கெட் மட்டும் தான் கைப்பற்றி இருந்தார். ஒரு போட்டியில் அவருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு ஓவர் மட்டும் விசி 12 ரன்கள் கொடுத்திருந்தார்.

மீதம் இருக்கும் ஐந்து போட்டிகளில் சேர்த்து ஒரே ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றிய ஜடேஜாவின் ஃபார்மை ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டெஸ்டில் சிறப்பாக பந்து வீசும் ஜடேஜா, டி20 போட்டியில் எடுபடாமல் இருப்பதை ஏன் இந்திய அணி கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் பெரிதாக உள்ளது.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான் மிக மோசமான ஒரு சாதனையும் படைத்து இன்னும் விமர்சனத்தை பெற்றுள்ளார் ரவீந்திர ஜடேஜா. ஒரு டி20 உலக கோப்பை தொடரில் நிறைய இன்னிங்ஸ்களில் விக்கெட் எடுக்காமல் இருந்த இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கு தற்போது ரவீந்திர ஜடேஜா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஹர்பஜன்சிங் 5 போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் இருக்க, தற்போது அந்த சாதனையை தான் சமன் செய்து ஏச்சுக்கு ஆளாகியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.

மேலும் உங்களுக்காக...