ஆப்கானிஸ்தானுக்கு எதிரா 3 டீமால முடியாத விஷயத்தை.. தனியாளா செஞ்சு காட்டிய பூரன்

டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ள நிலையில் கத்துக்குட்டி அணிகள் என கருதப்படும் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இதற்கு மத்தியில் இந்தியா, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு அணிகள் லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. அவர்கள் வெற்றி நடை போட்டுக்கொண்டு தற்போது சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி உள்ளதால் நிச்சயம் இதில் மாறி மாறி ஆடும் போது ஏதாவது ஒரு அணி தங்களின் வெற்றி பயணத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்று தெரிகிறது.

இப்படி பல திருப்புமுனைகள் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இனிமேல் எதிர்பார்க்கலாம் என்பதால் அடுத்து வரும் போட்டிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று தான் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணைகள் மோதி இருந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக பூரான் 98 ரன்கள் எடுத்தும் ரன் அவுட் ஆனதால் துரதிர்ஷ்டவசமாக சதமடிக்கும் வாய்ப்பை இழந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான அணியில் இப்ராஹிம் சத்ரான் மட்டும் 38 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் 25 ரன்கள் கூட சேர்க்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி இருந்தனர்.

17 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 114 ரன்கள் மட்டுமே எடுக்க, 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கள் லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் பிடித்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை 75 ரன்களிலும், உகாண்டா அணியை 58 ரன்களிலும், பப்புவா நியூ கினியா அணியை 95 ரன்களிலும் சுருட்டி இருந்தது. இப்படி மூன்று போட்டிகளில் வெற்றியை பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணி, எந்த அணியையும் 100 ரன்கள் கடக்க விடாமல் ஆல் அவுட் செய்திருந்தது.

அப்படி அற்புதமாக பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நிக்கோலஸ் பூரன் மட்டும் 98 ரன்கள் எடுத்திருந்தார். மற் 3 அணிகளும் பூரான் தனியாக அடித்த ரன்னை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நெருங்காத நிலையில் இந்த புள்ளி விவரம் பலரையும் அசர வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.