ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்து 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், இன்னமும் கொஞ்சம் கூட அந்த போட்டியின் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் குறையவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கூட ஒவ்வொரு போட்டிகளும் மிக விறுவிறுப்பாக செல்வதுடன் மட்டுமில்லாமல் பேட்டிங்கிற்கான மிகவும் அதிரடியான சீசனாகவும் இந்த முறை இருந்து வருகிறது.
ஆனால் அதே வேளையில் இந்த ஐபிஎல் தொடரை சுற்றி மிகப்பெரிய ஒரு சர்ச்சையும் தற்போது உருவாகியுள்ளது அதிக விவாதத்தையும் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் நடைபெற்றிருந்தது. இதில் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ராகுலின் 152 ரன்கள் உதவியுடன் 264 ரன்கள் எடுத்திருந்தது. இதுவரையில் 264 ரன்கள் இலக்கை ஐபிஎல் போட்டிகளில் எந்த அணிகளும் சேஸ் செய்தது கிடையாது. ஆனால் அடுத்து ஆடிய பஞ்சாப் அணி, 19 வது ஓவரிலேயே இலக்கை எட்டி சாதனை புரிந்திருந்தது. இதே போல, அடுத்து நடந்த போட்டியிலும் 229 ரன்கள் என்ற இலக்கை ஹைதராபாத் அணி எந்தவித சிரமும் இன்றி எட்டிப் பிடித்தது.
ஆனால், நிஜத்தில் இந்த இரண்டு போட்டியிலும் தோற்ற அணிகள் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம், தோல்வி அடைந்த அணிகளில் பல வீரர்கள் முக்கியமான கேட்சை தவற விட்டது தான். அதிலும் அப்படி விட்ட கேட்ச்கள் அனைத்துமே மிக மிக எளிதாக இருந்தது. இதற்கு முந்தைய சில போட்டிகளிலும் கூட பல எளிதான கேட்ச்கள் தவற விடப்பட்டிருந்தது.
ஐபிஎல் தொடரில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை நிறைய கேட்ச்களை பல வீரர்கள் தவற விட்டு வரும் சூழலில், பிக்சிங் ஏதும் இருக்குமா என்ற விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழாமல் இல்லை. அதே வேளையில், வெயில் உள்ளிட்ட சில காரணங்கள் கூட இதன் பின்னால் இருக்கலாம் என பலரும் சொல்லி வருகின்றனர்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

