ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு கிடைச்ச பொன்னான வாய்ப்பு.. போன வருசத்துக்கும் சேர்த்து சம்பவம் பண்ணிடலாம்..

டி20 உலக கோப்பைத் தொடரின் லீக் போட்டிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் இனிவரும் போட்டிகள் தான் யார் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள் என்பதை தீர்மானிக்க போகிறது. இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளின் அடிப்படையில் மொத்தம் ஏழு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து என ஏழு அணிகள் முன்னேறி இருந்த நிலையில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி இருந்தது.

மறுபுறம் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், சூப்பர் 8 போட்டிகளிலும் அவர்கள் நிச்சயம் அதே தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என தெரிகிறது.

இன்னொரு பக்கம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, லீக் போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாறி போனாலும் பந்துவீச்சில் எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். அதேபோல கடந்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தது இன்னும் பல ரசிகர்கள் மத்தியில் சோகமாக தான் இருந்து வருகிறது.

பலமாக அணியாக இருந்த போதிலும் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல், கடைசி போட்டியில் மட்டும் செய்த தவறால் தோல்வியாக, அதுவும் இறுதிப் போட்டியாக அமைந்திருந்தது ஆஸ்திரேலியாவின் மீது கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த முறை லீக் சுற்றுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுடன் போட்டி இல்லை என்றாலும் சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் ஒரே பிரிவில் தான் உள்ளனர்.

அதிலும் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைத்துப் பார்க்க முடியாத அணியாக உள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றிலும் முதல் இரண்டு போட்டிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அல்லது நெதர்லாந்து அணியுடன் ஆட இருக்கும் ஆஸ்திரேலியா, அதன் கடைசி போட்டியில் தான் இந்தியாவை சந்திக்கிறது.

முன்னதாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் பெற்ற வெற்றியின் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 7 வெற்றிகள் பெற்ற அணி என்ற பெருமையை இங்கிலாந்து மற்றும் இந்தியாவுடன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் வென்றால், தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை டி20 உலக கோப்பை தொடரில் குவித்த அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுவிடலாம்.

அப்படி பங்களாதேஷ் அல்லது நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் என அடுத்தடுத்து அணிகளை தோற்கடித்து இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வந்தால், இந்த தொடர் வெற்றி பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு ரோஹித் அண்ட் கோவிற்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கடந்தாண்டு உலக கோப்பையை இழந்த விரக்தியை ஆஸ்திரேலியா மீது தீர்த்து இந்த முறை பழி வாங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.