ஜடேஜாவின் திடீர் ஓய்வுக்கு காரணமாக இருந்த கம்பீர்?.. ரோஹித், கோலி சொன்னது கரெக்ட் தான் போல..

டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி இருந்த நிலையில் அடுத்தடுத்து விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா வரைக்கும் தொடர்ந்து தங்களின் ஓய்வுகளை அறிவித்திருந்தனர். இந்த மூன்று பேருமே டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த நிலையில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்டில் மட்டும் இவர்கள் தொடர்ந்து ஆட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த மூன்று பேருமே 35 வயதுக்கு மேல் இருப்பதால் டி20 போட்டிகளில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த மூன்று பேருக்குமான ஓய்வின் பின்னணி குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் இந்த சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் விராட் கோலி ஓய்வாகி இருந்த சமயத்தில் டி20 உலக கோப்பை வென்றதால் அந்த மனநிறைவுடன் ஓய்வு அறிவிப்பதாகவும் சூழ்நிலை காரணமாகவும், அதே வேளையில் இளம் வீரர்களுக்கு வழி விடுவதற்கான சிறந்த நேரமும் இதுதான் என குறிப்பிட்டு இருந்தார். அதே போல ரோஹித் ஷர்மாவும் கூட தனது ஓய்வு பற்றி பேசி இருந்தபோது சூழல் காரணமாக தற்போது இந்த முடிவை எடுப்பது சரியான நேரம் என்று நினைப்பதாகவும் கூறி இருந்ததுடன், உலக கோப்பையை வென்று பிரியாவிடை கொடுப்பதை விட ஓய்வுக்கு நல்ல தருணம் இருக்காது என்றும் கூறியிருந்தார்.

இப்படி ரோஹித் மற்றும் கோலி என இருவருமே சூழ்நிலை எனக் கூறியிருந்தது அவர்களின் வயதின் அடிப்படையில் பிசிசிஐ அடுத்து எடுக்க போகும் முடிவு என்று தான் தெரிகிறது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக பிசிசிஐயுடன் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலின் போது மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் தனித்தனியாக மூன்று அணிகளை தயார் செய்வதுடன் தனது திட்டம் என்றும் கம்பீர் கூறி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனால் இளம் வீரர்கள் அதிகம் துடிப்புடன் ஆடும் டி20 போட்டியில் ஜடேஜா, ரோஹித் ஷர்மா மற்றும் கோலி போன்ற வீரர்கள் இல்லாமல் இருப்பதைத் தான் கம்பீரும் விரும்புவார் என்ற அடிப்படையில் தான் இவர்கள் அதற்கு முன்பாகவே ஓய்வு அறிவித்து விட்டதாகவும் சில பரபரப்பு கருத்துக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.