ஐடி ஊழியர்களின் சம்பளம் குறைப்பா? ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி?

ஐடி ஊழியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் சுமார் 40% வரை சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் காரணமாக அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் அமேசான் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ள நிலையில் இன்னும் சில நிறுவனங்கள் வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்ளன.

IT office1 இந்த நிலையில் சில நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கைக்கு பதிலாக சம்பள குறைப்பு நடவடிக்கையை எடுக்க போவதாகவும், இதுவும் சிக்கன நடவடிக்கைகளில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து சிறிய நிறுவனங்கள் வரை ஐந்து சதவீதம் முதல் நாற்பது சதவீதம் வரை சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

IT officeபெருகி வரும் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக ஐடி நிறுவனங்களுக்கான ஆர்டர் குறைந்து வருவதாகவும் இதனால் ஐடி நிறுவனங்களின் வருமானம் குறைந்துவிட்டது என்றும் இதனை ஈடுகட்ட சம்பள குறைப்பு மற்றும் வேலைக்கு நடவடிக்கையை தவிர வேறு வழியில்லை என்றும் ஐடி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஐடி ஊழியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வருவதால் வீடு கார் பைக் என தவணை முறையில் வாங்கிய நிலையில் தற்போது திடீரென சம்பளம் குறைந்தால் தவணை கட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பொருளாதார ஆலோசகர்கள் ஐடி ஊழியர்களுக்கு தவணை முறையில் எந்த பொருளையும் வாங்க வேண்டாம், இருக்கும் பணத்தை சிக்கனமாக சேமித்து வையுங்கள் என்று அறிவுறுத்திய நிலையில் சேமித்து வைத்த ஐடி ஊழியர்கள் மற்றும் தப்பித்துக் கொள்வார்கள் என்றும் ஆடம்பரமாக செலவு செய்த ஐடி ஊழியர்கள் சிக்கலில் மூழ்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு முழுவதுமே பொருளாதார மந்தநிலை இருக்கும் என்று அடுத்த ஆண்டு முதல் தான் ஓரளவுக்கு பொருளாதார சீரடையும் என்றும் கூறப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு வரை ஐடி ஊழியர்கள் வருமானத்தின் பெரும் பகுதியை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews