பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ் தேதியில் டுவிஸ்ட் வைத்த நிறுவனம்! ரசிகர்களுக்கு அதிர்ச்சி

மணிரத்னம் இயக்கிய வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன்: பகுதி 1 (PS-I) இரு வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 500 கோடியைக் கடந்ததன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையைச் செய்திருக்கிறார் பொன்னியின் செல்வன்.

‘சியான்’ விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் முன்னணியில் நடித்துள்ளனர், PS-I 10 ஆம் நூற்றாண்டின் சோழர் காலத்தை பின்னணியாகக் கொண்டுள்ளது, மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும் முடிந்தது! யாருலா கல்யாணத்துக்கு போனாங்க தெரியுமா?

பொன்னியின் செல்வன் படம் நவம்பர் மாதம் 11-ந் தேதி ஓடிடி-யில் வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது அதில் ஒரு டுவிஸ்ட் வைத்து படத்தை முன்கூட்டியே,நவம்பர் 4-ந் தேதியே ரிலீஸ் செய்ய உள்ளனர்.

கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

அமேசான் பிரைம் நிறுவனம் வைத்த டுவிஸ்ட் இப்படத்தை தியேட்டரில் டிக்கெட் வாங்குவது போல், ஓடிடி-யில் ரூ.199 செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்பது தான்.நவம்பர் 11-ந் தேதி முதல் அமேசான் பிரைம் சந்தாதாரர்கள் இலவசமாகவே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.