கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

கிராமத்து சமையல் என்றாலே பொதுவாக தனி ருசி தான் அதிலும் கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு என்றால் வாயில் எச்சில் தான் வரும். அதை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

இதை சூடான சாதத்தில் ஊற்றி அதனுடன் அப்பளம் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

செய்ய தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 1/4 கிலோ

சின்ன வெங்காயம் – 10

நல்லெண்ணெய் – 150 மில்லி

சீரகம் – சிறிது

வறுக்க

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

மிளகு – 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 15

தனியா – 1/4 கப்

வேர்கடலை – 4 தேக்கரண்டி

எள் – 2 தேக்கரண்டி

வறுத்ததுடன் சேர்த்து அரைக்க :

சின்ன வெங்காயம் – 50 கிராம்

தோலுடன் பூண்டு – 1

கருவேப்பிலை – 1 கைப்பிடி

புளி – நெல்லிக்காய் அளவு

குழந்தை பெற்ற பின் வரும் வழியை சரி செய்யும் உளுத்தம் கீர்! மிஸ் பண்ணாதிங்க!

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்து கொள்ளவும்.வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு தனி தனியாக வறுத்து கொள்ளவும்

வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.பின்னர் அதனுடன் வறுத்ததுடன் சேர்த்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

கத்திரிக்காயை நான்காக கீறி அதில் இந்த மசாலாவை உள்ளே வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.

கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் மீதி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

கோதுமையில் சுவையான சத்தான கீர் செய்யலாமா? இதோ!

கொஞ்ச நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார். கொத்த மல்லி இலை தூவினால் சுவை கூடுதலாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews