கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை.. அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க திட்டமா?

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை இழந்து உள்ள பாஜக ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஆனால் தோல்வி அடைந்த பாஜக அவ்வளவு எளிதில் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மறைமுகமாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் முதல்வர் பதவி கிடைக்காத எம்எல்ஏ மற்றும் அவருடைய ஆதரவாளர்களை அழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

karnataka election1

கர்நாடக மாநிலத்தில் தற்போது சித்தராமய்யா தான் அடுத்த முதல்வர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டிகே சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை வளைக்க ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் பாஜக களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

டிகே சிவகுமார் தலைமையில் ஒரு அணி பிரிந்து வந்தால் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்க வைப்பதற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை புக் செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து எம்எல்ஏக்களும் பெங்களூரில் தான் தங்கி இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தோல்வியை ஏற்றுக்கொண்டு பாஜக அதிகாரத்தை காங்கிரஸ் இடம் ஒப்படைக்குமா அல்லது ஆபரேஷன் தாமரை திட்டத்தின் மூலம் அதிரடியாக களமிறங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கர்நாடக மாநில மக்கள் காங்கிரஸ்தான் ஆட்சி செய்ய வேண்டும் என தெளிவாக வாக்களித்துள்ள நிலையில் மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.