உலக சாக்லேட் தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் இதோ…

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது சாக்லேட் தான். சாக்லேட் ஐஸ்க்ரீம், சாக்லேட் மில்க்ஷேக், சாக்லேட் கேக், சாக்லேட் பிஸ்கட் என அனைவரும் ருசித்து மகிழ சாக்லேட்டில் பல வகைகள் உண்டு. இந்த சாக்லேட்டின் மகிமையை கொண்டாட உலகத்தினரால் உலக சாக்லேட் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக சாக்லேட் தினம் 2024: தேதி

உலக சாக்லேட் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் இந்த இனிப்பை கொண்டாட இந்த நாள் அர்பணிக்கப்பட்டுள்ளது.

உலக சாக்லேட் தினம் 2024: வரலாறு

உலக சாக்லேட் தினத்தின் வரலாறு 2009 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டது. 1550 இல் ஐரோப்பாவில் முதல் சாக்லேட் பார் திறக்கப்பட்ட நாளின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நாள் நிறுவப்பட்டது. அதன் பின்னர், உலக சாக்லேட் தினம் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

உலக சாக்லேட் தினம் 2024: முக்கியத்துவம்

சாக்லேட் ஒரு பொதுவான இனிப்பு பண்டம் மட்டுமல்லாமல் உடம்புக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இதில் நிறைந்துள்ளது. சாக்லேட்டில் இருக்கும் ஒரு திரவம் சாப்பிடுவரின் மூளையில் மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. இதனால் நம் மனதிற்கு அன்பானவர்களை சந்திக்கும் போது சாக்லேட்களை வாங்கிச் செல்கிறார்கள். இந்த உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.