50 ஆண்டுகள் ஒற்றுமையாய் வாழ்ந்த தம்பதிகள்.. கருணைக்கொலையால் ஒரே நாளில் மரணம்..!

நெதர்லாந்து நாட்டில் 50 ஆண்டுகள் ஒற்றுமையாய் வாழ்ந்த தம்பதிகள் கருணை கொலை செய்ய அரசை நாடிய நிலையில் அரசும்,  அவர்களது முடிவை ஏற்று கருணை கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் மற்றும் எல்ஸ் தம்பதிகள் கடந்த சில நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அந்த நோய்க்கு பல மாத்திரை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அடுத்து இருவரும் தொடர்ந்து வாழ விருப்பமில்லை என அரசுக்கு தகவல் கொடுத்து தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அரசும் அவர்களது மருத்துவ அறிக்கையை பார்த்து அவர்கள் இருவரையும் கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் கருணை கொலை செய்யப்பட்டனர்.

நெதர்லாந்து நாட்டில் கருணை கொலை மற்றும் தற்கொலை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தம்பதிகள் கருணை கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருணை கொலை செய்யப்பட்ட ஜான் மற்றும் எல்ஸ் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கூட தனது மகன் மருமகளை நெகிழ்ச்சியாக பார்த்ததாக கூறப்படுகிறது.  இறப்பதற்கு முந்தைய நாள் ஜான் மற்றும் எல்ஸ் குடும்பத்தோடு கடற்கரையில் சில மணி நேரம் கழித்ததாகவும் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக தூங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் மறுநாள் கருணை கொலை செய்யும் மருத்துவர் வந்ததாகவும் அவர்கள் இந்த தம்பதிக்கு இறப்பதற்கான மாத்திரைகளை கொடுத்ததாகவும் தெரிகிறது. ஒரு சில நிமிடத்தில் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த நிலையில் அவர்கள் விரும்பிய படியே அவர்களது இறுதி சடங்கு நடத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

என் அப்பாவின் கடைசி நேரங்கள் என் கண்களிலே இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் தங்களது உடல் உபாதை சகித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை என்றும் அதனால் தான் பெற்றோரின் விருப்பப்படியே அவர்களை நாங்கள் வழி அனுப்பி வைத்தோம் என்றும் அவரது மகன் கண்ணீருடன் கூறியுள்ளார்.