கூட்டத்திற்கு நடுவே.. 4 வயதில் தொலைந்த மகன்.. 28 வருஷம் கழிச்சு நடந்த அற்புதம்.. அதோட காரணம் தான் அசர வெச்சுருக்கு..

By Ajith V

Published:

உலகத்தை சுற்றி நிறைய அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி கொண்டே இருக்கும் அதே வேளையில், சில சமயம் மக்கள் மனதில் ஆனந்த கண்ணீர் வரவழைக்க கூடிய நிகழ்வுகளும் கூட நடைபெறும். அப்படி ஒரு செய்தி குறித்த தகவலை தான் தற்போது பார்க்க போகிறோம்.

கிழக்கு சீன பகுதியில் வசித்து வந்தவர் தான் கவுமிங் மார்டென்ஸ். கடந்த 1994 ஆம் ஆண்டில் அவருக்கு 4 வயதாக இருந்த போது பெற்றோருடன் பயணித்த சமயத்தில் கவுமிங் தொலைந்து போனதாக கூறப்படுகிறது. அவரது பெற்றோர்கள் பதறி போக, பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அவர்கள் மனமுடைந்து போகவே, இன்னொரு பக்கம் கவுமிங் மார்டென்ஸை கண்டுபிடித்த சிலர், அவரை ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் கொண்டு சேர்த்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு இவரை டச்சு நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினரும் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். மேலும் அதே பெயரிலேயே அந்த குழந்தையும் அவர்கள் வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே, கவுமிங்கின் உண்மையான பெற்றோரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.

எப்படியாவது அந்த பையனின் பெற்றோர்களை கண்டுபிடித்துவிட வேண்டும் என அவர்களும் உறுதியாக இருக்க கடந்த 2007 ஆம் ஆண்டு சீனாவிற்கும் அதற்காக திரும்பி உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து தத்தெடுத்தார்களோ அந்த ஆதரவற்றோர் இல்லம் அங்கு இல்லை என்றும் தெரிந்த நிலையில் அவர்கள் மனமும் துவண்டு போயுள்ளது.

ஆனாலும் அதற்கான முயற்சிகள் எதையும் நிறுத்தாமல் இருந்த கவுமிங், சீனாவில் பல ஆண்டுகள் இருப்பதற்காக நிறைய பகுதி நேர பணிகளையும் செய்து பணத்தை சேர்த்து கொண்டு பின்னர் அதற்கான முயற்சிகளிலும் இறங்கி உள்ளார். இதற்கு மத்தியில் 2012 ஆம் ஆண்டில், காணாமல் போன குடும்பத்தினரை கண்டுபிடித்து தருவதற்கான ஒரு தன்னார்வ நிறுவனத்திலும் தனது பெயரை பதிவு செய்திருந்தார் கவுமிங்.

இப்படி ஏறக்குறைய பல ஆண்டுகள் தனது பெற்றோரை தேடி வந்த கவுமிங்கிற்கு இந்த நிறுவனம் மூலம் பலன் கிடைத்திருந்தது. கடந்த ஆண்டில் இளைஞர் கவுமிங்கின் டிஎன்ஏவுடன் அவரது தாயாரான பென் சூரானின் டிஎன்ஏவும் பொருந்தி போயுள்ளது. ஆனால், அதே வேளையில் துரதிர்ஷ்டவசமாக, தனது வளர்ப்பு மகனின் பெற்றோர் யார் என்பது தெரியாமலே கவுமிங்கின் வளர்ப்புத் தாய் மறைந்து போனதாக கூறப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமாக, கவுமிங்கின் நிஜ பெற்றோர்களும் பல ஆண்டுகளாக தங்களின் மகனை அந்த நிறுவனம் தேடி வந்ததும் கவனம் ஈர்த்துள்ளது.