உங்கள் வீட்டில் பீரோவை தெரியாமல் கூட இந்த பக்கம் வச்சுடாதீங்க.. வாஸ்து டிப்ஸ்

சென்னை: பீரோவை தெரியாமல் கூட இந்த பக்கம் வச்சுடாதீங்க..உங்கள் வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாஸ்துவில் உள்ள சில தகவல்களை பற்றி பார்ப்போம்.

பலருக்கும் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் போதவில்லையே என்ற கவலை இருக்கும். என்ன தான் சம்பாதித்தாலும் பணம் வீடுகளில் தங்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். சிலருக்கும் தங்கம், வெள்ளி பொருட்களை வாங்க சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கும்.

அவர்கள் எல்லாருமே தாங்கள் சம்பாதிக்கும் பணம், நகை உள்ளிட்ட வாஸ்து படி வைத்தால் அதிகமாக பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சில முறைகளில் வைத்தால் பணம் தங்காது என்ற நம்பிக்கையும் உள்ளது. அந்த இரு விஷயங்கள் பற்றியும் பார்ப்போம்.

உங்கள் வீட்டில் பீரோவை வடமேற்கில் வைத்தால் சேமிக்கவே முடியாமல் கடன் தொல்லை வரக்கூடுமாம். தென்கிழக்கில் பீரோ இருந்தால், வீண் செலவுகள் வருமாம். மேலும் கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு உள்ளதாம்.

உங்கள் வீட்டில் பணம் குவிய வேண்டும் என்றால் பீரோவின் பார்வை குபேர பார்வை படும் படி வைக்க வேண்டுமாம். பீரோ வைக்கும் இடம் நடு வடக்கு திசை நன்றாக இருக்க வேண்டுமாம். இந்த திசையானது குபேரன் பார்வை தெளிவாக விழும் பகுதி இதுவென்பதால், கிச்சன், படிக்கட்டு இருக்கக்கூடாதாம்.

அந்தவகையில், வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்து பீரோ வைக்கலாம். கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், நிம்மதியும், லாபமும் கிடைக்கும்.. ஆனால் பீரோ வடக்கு நோக்கி திறக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம் என்கிறார்கள் பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்கிறார்கள் , சிம்பளாக சொல்வது என்றால் வடக்கு பார்த்து தான் பீரோ இருக்க வேண்டுமாம்.

பீரோவை வைக்கும் தென்மேற்கு திசையை பார்த்தவாறு பீரோ வைத்திருந்தால் நாம் வைக்கும் பணம் பெருகும் என்றும் பீரோவின் பின்புறம் தெற்கு திசை நோக்கியும் முன்புறம் வடக்கு திசை நோக்கியும் அமைய வேண்டும் என்று வாஸ்துபடி கூறுகிறார்கள்..

ஒருவேளை பீரோவைத் தெற்கு மூலையில் வைக்க இடம் இல்லை என்றால் பின்புறம் மேற்கு திசை நோக்கியும், முன்புறம் கிழக்கு திசை நோக்கியும் இருக்குமாறு வைக்கலாம் என்று யோசனை சொல்கிறார்கள். அதேநேர 4 மூலைகளிலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பீரோவை வைக்க வேண்டும். காரணம், இந்த இடைவெளியில் வாயு பகவான் ஊடுருவி செல்வாராம்.. இடைவெளி இல்லாமல் பீரோவை சுவற்றையொட்டி வைத்தால், பணத்தடை ஏற்படக்கூடும் என்கிறார்கள். அதேபோல் எக்காரணம் கொண்டும் வடமேற்கு பகுதியில் பீரோவை வைக்கக்கூடாது. தெற்கு நோக்கியும் வைக்கக்கூடாது என்கிறார்கள். அப்படி செய்தால் வீட்டில் பணக்கஷ்டம் இன்னும் அதிகமாகி விடுமாம்.