isha

கே.என்.நேருவை அமைச்சர் பதவிலிருந்து தூக்குங்க!. கொந்தளித்த விஜய்..

நகராட்சி துறை அமைச்சராக உள்ள கே.என்.நேரு 1000 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை சமீபத்தில் புகார் சொன்னது. மேலும் தமிழக காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியது.…

viijay nehru

நகராட்சி துறை அமைச்சராக உள்ள கே.என்.நேரு 1000 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை சமீபத்தில் புகார் சொன்னது. மேலும் தமிழக காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியது. ஆனால் திமுக அதை இப்போது வரை செய்யவில்லை.

எனவே இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அமலாக்கத்துறை. அந்த வழக்கில் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நகராட்சி துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளுக்கு தந்துள்ள ஆதாரங்களின் முகாந்திரம் இருக்கிறது.. எனவே உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்..

ஊழல் மிகுந்த அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாது ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று.. அமைச்சர் தானாக வந்து ராஜினாமா செய்ய வேண்டும்… இல்லையென்றால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. மன்னிக்க முடியாத அளவுக்கு ஊழல் மலிந்துள்ள திமுக அரசை தேர்தலில் தூக்கி எறிந்து மக்கள் விசிலடித்து கொண்டாட காத்திருக்கிறார்கள்’ என பதிவிட்டுள்ளர்.