திமுக தரலனா எங்ககிட்ட வாங்க!.. காங்கிரஸுக்கு கதவை திறந்து காத்திருக்கும் தவெக!..

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த பல தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது.  ஆனால் இதுவரை இல்லாத வகையில் தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கு…

vijay

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த பல தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது.  ஆனால் இதுவரை இல்லாத வகையில் தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்க துவங்கியிருக்கிறது.. இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது என முக ஸ்டாலின் கூறியும் காங்கிரஸ் அதை அந்த கோரிக்கையை விடவில்லை..

ஆட்சி மற்றும் அதிக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது மட்டுமல்லாமல், வருகிற சட்டசபை தேர்தலில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகள், அமைச்சர் பதவிகள், இரண்டு ராஜ்ய சபா சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களை காங்கிரஸ் கேட்பதாக தெரிகிறது.
ஆனால் திமுக இதற்கு சம்மதிக்கவில்லை..

ஒருபக்கம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகள், அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி என காங்கிரஸுக்கு தவெக ஆசை காட்டுகிறது. ஏனெனில், இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. எனவே காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெ விரும்புகிறது. அதோடு திமுகவின் பலத்தை குறைக்கவும் தவெக கணக்கு போடுவதாக தெரிகிறது..

இந்நிலையில்தான், மார்ச் மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வரவிருக்கிறார். காஞ்சிபுரத்தில் நடக்கும் காங்கிரஸ் தொடர்பான ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். அதற்குள் திமுக கூட்டணி உறுதியாகவில்லை என்றால் தமிழகம் வரும் ராகுல் காந்தி தலைவர் விஜயை சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்..