நான் இதுமாதிரி ஆகணும்னு தான் ஆசைப்பட்டேன்… பாடகராக அல்ல… உன்னிகிருஷ்ணன் பகிர்வு..

கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தவர் உன்னிகிருஷ்ணன். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தவர். தனது 12 வது வயதில் இருந்தே கர்நாடக இசையை கற்று தேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்.

பிரபுதேவா நடித்த ‘காதலன்’ திரைப்படத்தில் ‘என்னவளே அடி என்னவளே’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார் உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தான் பாடிய முதல் பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார் உன்னிகிருஷ்ணன். தமிழ் பாடலுக்காக முதல் தேசிய விருத்தைப் பெற்ற முதல் ஆண் பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இனிமையான குரலால் தமிழ் சினிமாவில் பல மறக்க முடியாத பாடல்களை பாடியவர் உன்னிகிருஷ்ணன். தமிழ்நாட்டின் கலைமாமணி, நாத பூஷணம், இசை பேரொளி, யுவ கலா பாரதி, இசையின் புன்னகை, இசை செல்வம், சங்கீத கலாசாரதி, சங்கீத சக்கரவர்த்தி போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

சினிமாவில் பின்னணி பாடகராக மட்டுமல்லாமல் சின்னத்திரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவின் அணைத்து சீசன்களில் நடுவராக பங்களித்தவர். ஆசியாநெட் டிவியின் ஸ்டார் சிங்கரிலும் நடுவராக தோன்றியவர்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட உன்னிகிருஷ்ணன் அவர்களிடம், பாடகர் ஆகவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உன்னிகிருஷ்ணன், நான் பெரிய கிரிக்கெட்டர் ஆக இருந்திருப்பேன். அதுதான் என்னுடைய ஆசையாகவும் இருந்தது, பாடகராக வேண்டும் என்பதல்ல. இசை என்னை தேர்வு செய்துக் கொண்டது என்று பகிர்ந்துள்ளார் உன்னிகிருஷ்ணன்.