பயாலஜி டீச்சருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் இதயம் வரைபடம்.. மாணவர் செஞ்ச குசும்பு வேலை

சாதாரணமாக பள்ளிகளில் பயாலஜி வகுப்பில் தவளையின் வரைபடம், மண்புழுவின் குறுக்கு வெட்டுத் தோற்றம், மனிதன் இதயம் வரைபடம், மூளை வரைபடம் என பிராக்டிக்கல் நோட்டில் வரைந்து பாகங்களைக் குறிப்பிடுவோம். அதேபோல் தேர்வுகளிலும் இதயம் குறுக்குவெட்டுத் தோற்றம் படம் வரைந்து பாகங்களைக் குறி என்ற கேள்விக்கு இதயத்தின் படம் வரைந்து நமக்குத் தெரிந்த பாகங்களைக் குறிப்பிடுவோம். ஆனால் குசும்புக்கார மாணவர் ஒருவர் இதயத்தின் வரைபடத்தினை வரைந்து அதன் பாகங்களைக் குறிப்பதற்குப் பதிலாக தன்னுடைய தோழிகளின் பெயர்களைக் குறித்துள்ளார்.

இன்ஸ்டாவில் தற்போது இந்த வரைபடம் வைரலாகி வருகிறது. எனினும் இந்த வரைபடம் குறித்து எந்த தகவலும் இல்லை. எந்தப் பள்ளி,எந்த ஊர் என்பது பற்றிய உறுதியான தகவலும் கிடையாது. இதயத்தின் படம் வரைந்து அதில் நான்கு புறமும் ஹரிதா,பிரியா, ரூபா, நமீதா, பூஜா என தனது தோழிகளின் பெயர்களைக் குறித்திருக்கிறார் அம்மாணவர். மேலும் இதயத்தின் செயல்பாடுகள் என்ற பதிலில் பிரியா என்னுடன் எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்வார் என்றும் எனக்கு அவளைப் பிடிக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

வாரிசு சான்றிதழ் முதல் சாதி சான்று வரை.. ஸ்டாலின் போட்ட ஒரே ஆர்டர்.. நடந்த சூப்பர் மாற்றம்

அதேபோல் ரூபா என்ற தோழி ஸ்னாப் சாட்டில் என்னுடன் சாட்டிங் செய்வார். அவள் மிக அழகானவள் என்று தெரிவித்திருக்கிறார். நமீதா என்ற தோழிக்கு எனது உறவினரின் மகள் என்றும், அவளுக்கு நீண்ட கூந்தல், பெரிய கண்கள் உள்ளது என்றும் பதில் அளித்திருக்கிறார்.

அதேபோல் பூஜா மற்றும் ஹரிதாவுக்கு என்னுடைய முன்னாள் காதலி என்றும், ஹரிதா தன் பள்ளித் தோழி என்றும் பதில் அளித்திருக்கிறார் இந்தக் குறும்புக்கார மாணவர். இந்தப் புகைப்படத்தினைப் பார்த்த நெட்டிசன்கள் அம்மாணவரை கலாய்த்துத் தள்ளுகின்றனர். எனினும் இவ்வாறு வரைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இது பழைய பதிவு என்றும் கூறப்படுகிறது.