ஆகஸ்டில் மோடி அரசு கவிழும்..தேர்தலுக்குத் தயாராக இருங்கள்.. ஆருடம் சொன்ன லாலு பிரசாத் யாதவ்

பீகார் : பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் வருகிற ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழும் என ஆருடம் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து 2014, 2019 ஆகிய தேர்தலுக்குப் பின் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். கடந்த இருதேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சி இந்தமுறை தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியில் அமர்ந்தது. மக்களவையில் பா.ஜ.க-வின் பலம் 240ஆக குறைந்து விட்டது. மேலும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.

மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்

இந்தமுறை காங்கிரஸ் 99 எம்.பி.களைப் பெற்றுள்ளது. மேலும் கூட்டணிக் கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகளின் இமாலய வெற்றியும் காங்கிரஸ்-க்கு மக்களவையில் பெரும் பலத்தினைக் கொடுத்துள்ளது. இதனையடுத்து வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டது ஆளுங்கட்சி வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் கொஞ்சம் கூட பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. ராகுல் காந்தியின் பேச்சு நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.

இதனையடுத்து பா.ஜ.வின் குரல் மக்களவையில் ஓங்கி ஒலிப்பது சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், முனனாள் முதலமைச்சருமான லாலுபிரசாத் யாதவ் பா.ஜ.க அரசு பற்றி விமர்சித்துள்ளார். அதில், மோடி அரசு மிகவும் வலுவிழந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். எதற்கும் தேர்தலுக்குத்தயாராக இருங்கள் என்று தன் கட்சித் தொண்டர்களிடம் ஆருடம் கூறியிருக்கிறார் லாலுபிரசாத் யாதவ்.