பிரபாஸ் திருமணம் பற்றிய கேள்விக்கு இப்படியொரு பதிலைக் கூறிய ராஜமௌலி…

ராஜமௌலி தெலுங்கு குடும்பத்தில் மைசூர் மாநிலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் கோடூரி ஸ்ரீசைல ஸ்ரீராஜமௌலி ஆகும். சிறுவயதில் இருந்தே கதை சொல்வதில் ஆர்வம் கொண்டிருந்தவர் ராஜமௌலி. அதன் வெளிப்பாடாகவே சினிமாவிற்குள் அவரை வரவைத்தது.

உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ராஜமௌலி, தொலைக்காட்சி தொடர், விளம்பர படங்கள் என பணியாற்றியுள்ளார். 2001 ஆம் ஆண்டு இயக்குனராக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ராஜமௌலி பல முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார்.

ஃபன்டேசி காதல், அதிரடி த்ரில்லர் என பல ஜானர்களில் படத்தை எடுப்பவர் ராஜமௌலி. இருந்தாலும் ‘பாகுபலி : தி பிகினிங்’, ‘பாகுபலி: தி கங்குலுஷன்’ ஆகிய படங்களை இயக்கி புகழின் உச்சத்திற்கு சென்றார் ராஜமௌலி. இந்திய சினிமாவின் மிக பிரம்மண்டமான படமாகவும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் மாபெரும் வசூலை பெற்றது.

பாகுபலி திரைப்படத்தின் வாயிலாக பான் இந்தியா டைரக்டர் ஆகவும் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் இடம் பிடித்தார் ராஜமௌலி. அடுத்ததாக இவர் இயக்கிய RRR திரைப்படமும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகி புகழின் உச்சத்திற்கு சென்றார் ராஜமௌலி.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ராஜமௌலி அவர்களிடம் பிரபாஸ் ஏன் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி, பிரபாஸ் மிகவும் சோம்பேறி. திருமணம் செய்துக் கொள்வதிலும் சோம்பேறியாக தான் இருக்கிறார். ஒரு பெண்ணை கண்டுபிடித்து, காதலித்து, வீட்டில் சம்மதம் வாங்கி, பெண் வீட்டாரிடம் பேசி ஒத்துக் கொள்ள வைப்பது என இதெல்லாம் அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால் தான் பிரபாஸ் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்று பிரபாஸை கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார் ராஜமௌலி.