15-வது திருமண நாளைக் கொண்டாடிய எம்.எஸ்.தோனி – சாக்ஷி தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2010 ஜுலை 4-ல் சாக்ஷியைக் மனைவியாகக் கரம் பிடித்தார். நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு ஸிவா என்ற மகள் உள்ளார். ஒவ்வொரு வருடமும் தங்களது திருமண நாளைக் குதூகலகமாகக் கொண்டாடும் இத்தம்பதி இன்று தாங்கள் இல்லற வாழ்வில் இணைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர்.

மேலும் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 ஐ.பி.எல் போட்டியில் இந்திய அணி மீண்டும் 4-வது முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை பெற்றது. கடைசியாக தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 போட்டி ஆகிய இரண்டிலும் உலகக் கோப்பையை வென்றது. தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று தோனிக்கு மேலும் ஒரு பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

தனுஷ் என்றாலே விருதுதானா…? அடுத்த விருதைத் தட்டித் தூக்கிய தனுஷ் படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

தற்போது தோனி மும்மடங்கு மகிழ்ச்சியில் உள்ளார். ஏனெனில் உலகக் கோப்பை வெற்றி, ஜுலை 4 தனது திருமண நாள், ஜுலை 7 தனது பிறந்தநாள் என ஒட்டு மொத்தமாக ஒரே தருணத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோனி-சாக்ஷி தம்பதி தங்களது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடினர். இதனை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தல தோனியின் ரசிகர்கள் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.