தல தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டி மனைவி சாக்ஷி செஞ்ச அந்த ஒரு காரியம்..

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்வானும் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியின் 43-வது பிறந்த நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அண்மையில் ஐபிஎல் டி20 உலகக் கோப்பையை மீண்டும் இந்தியா வசமாக்கி தாய் நாட்டிற்கப் பெருமை தேடித் தந்திருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இது குறித்து தோனி எனது வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசைக் கொடுத்ததற்காக நன்றி என்று தெரிவித்திருந்தார் தோனி.

இன்று ஜுலை 7 அவரது பிறந்தநாள். தற்போது மும்பையில் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்சண்ட் தம்பதியின் திருமண விழாவின் ஒரு பகுதியான சங்கீத் வைபவத்தில் கலந்து கொண்டுள்ள தோனி-சாக்ஷி தம்பதி அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதற்கு முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவர்களது 15 வது திருமண ஆண்டினைக் கொண்டாடும் வகையில் இருவரும் கேக் வெட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனியின் மனைவி சாக்ஷி அவருடன் சேர்ந்து கேக் வெட்டி அவருக்கு ஊட்டி விட்டார். பின்னர் தோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க உடன் இருந்த நண்பர்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு சிறந்த மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை எவ்வளவு பெரிய நட்சத்திர தம்பதிகளாயினும் கணவனின் மீதான அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தினார் சாக்ஷி.

பிறப்பு சான்றிதழ் தொடர்பாக மத்திய அரசு அதிரடி உத்தரவு.. 80ஸ், 90ஸ் கிட்ஸ் உடனே பாருங்க

இதய வடிவிலான டிசைன் போட்ட டி-சர்ட்டை அணிந்து தன் ரசிகர்கள் மீதான பாசத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் தல தோனி. இந்திய கிரிக்கெட் அணியை உலக அரங்கில் முதலிடத்திற்குக் கொண்டு வந்த பெருமையும், தீர்க்கமான சரியான முடிவுகளை எடுப்பதிலும் வல்லவரான தோனி நம் இந்திய மண்ணில் பிறந்து மகத்தான பல சாதனைகளைச் செய்தது ஒவ்வொரு இந்தியனும் தானே சாதனை செய்தது போல பெருமைப்பட வேண்டிய தருணம் இது. தல தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.