கள்ளக்குறிச்சி விஷச்சாரயச் சம்பவம் – தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கிய கள்ளச்சாராய மரண சம்பவம் உலுக்கியிருக்கிறது. தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை அதிகரிக்க மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்னும் கன்னுக்குட்டியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மேலும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

உயிரழப்புக்குக் காரணம் அதீத அளவில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டம் தெரிவித்து வரும் வேளைய்ல தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. அலறிய மக்கள்..கன நேரத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்

அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு தனது தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார் விஜய்.