உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்

சென்னை: தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் குறைப்புக்கு, ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கையை விட, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமே காரணம் என்று மத்திய அரசு அறிவுறுத்துள்ளதால், கேஸ் சிலிண்டர்கள் குறித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை எடுக்க போகிறது. வீடு வீடாக வந்து அதிகாரிகள் சோதனை செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இது தவிர, புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு லட்சக்கணக்கானோர விண்ணப்பித்து இருக்கிறார்கள். ரேஷன் கார்டு தொடர்பாக ஆய்வுகளை கடந்த சில மாதங்களாக நடத்தி வரும் அதிகாரிகள், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருவதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதேநேரம் ஒரே வீட்டை இரண்டாக பிரித்து குடியிருப்பதுடன், இரண்டு கேஸ் இணைப்பு உள்ளதா மற்றும்இரண்டு கிச்சன் உள்ளதா என்பதை ஆய்வு செய்து தான் ரேஷன் கார்டு தருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசு கூட்டுறவுத்துறை புதிய ஆய்வினை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுடள்ளது. இதற்கு காரணம், சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கு, ரேஷனில் லிட்டர் மண்ணெண்ணெய், 15 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. கார்டுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாநில அரசுகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசு நிர்ணயம் செய்து வருகிறது.

ஆனால் தமிழகத்தில், 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 30 லட்சம் பேர் காஸ் இணைப்பு இல்லாமல் உள்ளதால், தலா ஒருவருக்கு, 5 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. அதன்படியே கடந்த 2021 ஏப்ரல் முதல் மாதம், 75.36 லட்சம் லிட்டராக இருந்த மண்ணெண்ணெய், 2022ல் மாதம் 45.20 லட்சம் லிட்டராக குறைந்தது. 2023ல், 27.12 லட்சம் லிட்டராக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கார்டுதாரருக்கு, 1 – 2 லிட்டரும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த வருடம் ஏப்ரல் முதல், 10.84 லட்சம் லிட்டராக மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டதால், ஒருவருக்கு 1 லிட்டர் கூட தர முடியாத நலை ஏற்பட்டுள்ளதாம்

இந்நிலையில தமிழக மண்ணெண்ணெய் குறைப்புக்கு, ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கையை விட, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமே காரணம் என்று மத்திய அரசு விளக்கம் தந்துள்ளதாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை 2.32 கோடி வீட்டு கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில், 41 லட்சம் பேர் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ளார்கள்.

இதனிடையே ஒரு வீட்டில், 2, 3 காஸ் இணைப்பு பெற்றிருப்பதால்தான், அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதாக, தமிழக அரசு நினைக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மண்ணெண்ணெய் வாங்கக்கூடிய கார்டுதாரர்களின் வீடுகளில், உண்மையிலேயே காஸ் இணைப்பு இல்லையா என்பதை ஆய்வு செய்யு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.