இந்த ஒரே ஒரு விலங்கு பால் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும்.. ஏன் தெரியுமா?

சென்னை: பொதுவாக பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் உலகிலேயே இந்த ஒரே ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் இருக்கும். அந்த விலங்கு பற்றி பார்ப்போம்.

நாம் எல்லாருமே தினமும் பால் குடிக்கிறோம். . இந்த பால் பசு அல்லது எருமையின் பால் ஆக இருக்கும். வீட்டில் உள்ள அனைவருமே பால் குடிப்பார்கள். இந்த பாலில் டீ அல்லது காபியும் தயாரித்து தினமும் குடிப்பார்கள்.

நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பால் மிகவும் முக்கியமானது ஆகும். நேற்று பிறந்த குழந்தைக்கு தாயின் பாலாக இருந்தாலும் சரி, அதே குழந்தை வளர்ந்த பிறகு பசு அல்லது எருமையின் பாலாக இருந்தாலும் சரி, குழந்தையின் ஊட்டச்சத்திற்கு பால் மிகவும் முக்கியம். லகில் சுமார் 6,400 பாலூட்டிகள் உள்ளன. இதில் அனைத்து விலங்கின் பாலும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் .

அதேபோல் வெள்ளை நிறத்தைத் தவிர வேறு பால் உலகில் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகில் கருப்பு பால் கொடுக்கும் விலங்கும் உள்ளது. பெண் கருப்பு காண்டாமிருகம் கருப்பு பால் கொடுக்கிறது. இவை ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. கருப்பு காண்டாமிருகம் பாலில் குறைந்த அளவு கொழுப்பு இருக்கிறத. தாய் காண்டாமிருகத்தின் பால் தண்ணீர் போல் இருக்கும். இதில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. இந்த மெல்லிய பால் விலங்குகளின் மெதுவான இனப்பெருக்க சுழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

கருப்பு காண்டாமிருகங்கள் நான்கு முதல் ஐந்து வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். கருப்பு காண்டாமிருகங்களின் கர்ப்ப காலம் ஒரு வருடத்திற்கும் மேலாகும். ஒரே நேரத்தில் ஒரு குட்டியை மட்டுமே பெற்றெடுக்கின்றன, பின்னர் கருப்பு காண்டாமிருகங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக நேரம் செலவிடுகின்றன.