சத்தமே இல்லாமல் ஸ்டாலின் அடித்த சிக்சர்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்களுக்கு ஜாக்பாட்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கநேர்முகத்தேர்வு இல்லாமல், எந்தவிதமாக குறுக்கீடுகளும் இல்லாம் பதவிகளில் அமர போகிறார்கள். வழக்கமான முறையில் இல்லாமல் இந்த முறை முற்றிலும் மாறி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் மாறி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2-வில் 507 பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ-வின் மூலம் 1,820 பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 20.06.2024 முதல் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வு முறை போல் இல்லாமல், இந்தாண்டு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முறை முற்றிலும் மாறி உள்ளது. தேர்வின் பாடத்திட்டங்கள், வயது வரம்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை என இரண்டு கட்டமாக நடத்த போகும் டிஎன்பிஎஸ்சி, முதல்நிலை தேர்வினை கொள்குறி வகையில் (Objective Type) நடத்த உள்ளது. அதனைத்தொடர்ந்து, தேர்ச்சி அடைப்பவர்களுக்கு முதன்மை தேர்வு குரூப் 2 மற்றும் 2ஏ-விற்கு தனிதனியாக நடக்க உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுவிட்டது.

குரூப் 2 தேர்வு என்பது 2024ம் ஆண்டினை பொறுத்தவரை தமிழ்மொழி தகுதி தாள் மற்றும் பொது அறிவு தாள் என இரண்டு தாள்களுடன் முதன்மை தேர்வு நடைபெறும். தமிழ் மொழி தாள் பத்தாம் வகுப்பு தரத்திலும், பொது அறிவு தாள் பட்டப்படிப்பு தரத்திலும் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2ஏ தேர்வு என்பது 2024ம் ஆண்டினை பொறுத்தவரை முதன்மை தேர்வு தமிழ் மொழி தகுதி தாள் மற்றும் பொது அறிவு, பொது நுண்ணறிவும் பகுத்தறிதலும், மொழிப்பாடம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதி தாள் பத்தாம் வகுப்பு தரத்தில் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் தாள், பொது அறிவு தாள் 50 % டிகிரி தரத்திலும், 20% பத்தாம் வகுப்பு தரத்திலும், மொழி பிரிவு 30% பத்தாம் வகுப்பு தரத்திலும் (Objective)முறையில் நடத்த உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய இரண்டு தேர்வர்களுமே முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் இப்பணியிடங்களுக்கு நேர்காணல் கிடையாது. எஸ்சி/எஸ்டி/பிசி/எம்பிசி ஆகிய பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎஸ்பிஎஸ் குரூப் 2 தேர்வர்கள் நேர்காணல் எதுவும் இன்றி தொழிலாளர் உதவி ஆய்வாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர், இந்த முறை உதவி ஆய்வாளர்,துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் நன்னடத்தை அலுவலர், பத்திரப்பதிவு துறையில் சார் பதிவாளர், புலனாய்வுப் பிரிவு & காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு கிளை உதவியாளர், விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பு உதவியாளர் போன்ற பணியிடங்களில் சேரலாம்.

அதேபோல் டிஎஸ்பிஎஸ் குரூப் 2ஏ தேர்வர்கள் நேர்காணல் எதுவுமின்றி நகராட்சி நிர்வாகத் துறையில் நகராட்சி ஆணையர் தரம்-II, தலைமை செயலகத்தில் பல்வேறு பிரிவுகளில் உதவி பிரிவு அலுவலர், வருவாய் துறையில் வருவாய் உதவியாளர், டவுன் பஞ்சாயத்து துறை நிர்வாக அதிகாரி, தலைமை செயலகத்தில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் , தலைமை செயலகத்தில் எழுத்தர், கூட்டுறவு சங்கங்கள் துறை துறையில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், உள்ளூர் நிதி தணிக்கை துறையில் தணிக்கை ஆய்வாளர், வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் வார்டன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத் துறையின் தணிக்கை பிரிவில் தணிக்கை ஆய்வாளர், தமிழ்நாடு மாநில திட்டக்குழு கீழ் பிரிவில் திட்டமிடல் இளைய உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் நேர்காணல் இல்லாமல் அமர முடியும். யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் மதிப்பெண் அடிப்படையில் இந்த முறை எளிதாக பதவிக்கு வர முடியும்.