டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு என்ன? செம்ம

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு இருக்குமா என்ற கேள்வி எழுந்தள்ளது. இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும்.. அதை பற்றி இப்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் அரசு பணியில் சேர விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி 6,244 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் வரை எழுதினர்.

இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணியிடங்கள் உள்ளன. இதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் அவர்களின் விருப்பம் ஆகியவை அடிப்படையில் பணிகள் கிடைக்கும். சிலருக்கு கிராம நிர்வாக அலுவலர் ஆகும் வாய்ப்பும், பலருக்கு இளநிலை உதவியாளர் வாய்ப்பும் உள்ளது.

குரூப் 4 தேர்வினை பொறுத்தவரை நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. எழுத்து தேர்வு முடிந்த உடன் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இவை சரியாக இருந்தால், அவர்களுக்கு பணி கிடைத்துவிடும். பொதவாக டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது சிலருக்கு கேள்விகள் எழுந்திருக்கும். அதனை பற்றி பார்ப்போம்..

இந்த முறை குரூப் 4 தேர்வு என்பது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்று இரந்தத. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.எப்போதும் கேட்பதை விட இந்த முறை கணிதத்தில் 2 கேள்விகள் கூடுதலாக இருந்தது.

அதேபோல் பொது அறிவு கேள்விகள் அதிக கடினமாக இருந்தன. 10 கேள்விகள் வேறு தரத்தில் இருந்தது . குரூப் 4 தேர்வு என்றாலும் அது குரூப் 2க்கு இணையாக சில கேள்விகள் இருந்ததாம். இந்த தேர்வு முன்பை விட கடினமாக இருந்தது என்று சொல்கிறார்கள். எனவே இந்த முறை கட் ஆப் குறையும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.

பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 – 155ஆக இருக்கும் வாய்ப்பு உள்ளதாம்.

அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்க்காக இருக்கும் என்கிறார்கள்.