அக்கட தேசமா அதிசயமாக பார்க்கும் பவன் கல்யாண் மனைவி? அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஹைதராபாத்: தமிழ்நாட்டின் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள பவன் கல்யாணின் மனைவியும் முன்னாள் ரஷ்ய மாடல் அழகியுமான அன்னா லெஷ்னேவாவின் சொத்து மதிப்பு பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தகவல்களை கேட்டு அக்கட தேசமே அதிசயமாக பார்க்கிறது. வாயை பிளக்க வைத்த அவரது சொத்து மதிப்பு பற்றி பார்ப்போம்.

1996 ஆம் ஆண்டு வெளியான ‘அக்கடா அம்மாயி இக்கட அப்பா’ படத்தின் மூலம் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகம் ஆனவர் பவன் கல்யாண். அவரது அண்ணன் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல மெகா ஸ்டாரும் கூட.. ஆந்திராவின் நம்பர் 1 நடிகரான சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடனே பவன் கல்யாண் வந்தார்.

பவண் கல்யாண் 1996 அறிமுகம் ஆனாலும், நடிகர் விஜய் போலவே சில காலம் கழித்தே வெற்றியும் பெற்றார்.. அதுவும் மிக தாமதாகவே வென்றார். 1998 ஆம் ஆண்டு பவன் கல்ணாய நடிப்பில் வெளியான ‘தோலி பிரேமா’ அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படம் ஆகும். அதன்பிறகு அடுத்தடுத்து ஏராளமான படங்களில் வென்றவர், ஆந்திர தேசத்தின் ‘தல’ போல இருக்கிறார். ஆம் நம்ம ஊரில் அஜித் எப்படியோ அங்கு பவன் கல்யாண் டாப் ஹீரோ.. மிகப்பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அவரது அண்ணன் சிரஞ்சீவியால் வெற்றி பெற முடியாத அரசியலில் வென்றுள்ளார்.

கடந்த முறை படுதோல்வியை சந்தித்த பவன் கல்யாண் மனம் தளராமல் ஐந்து வருடம் காத்திருந்து வென்றுள்ளார். ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் தனது ஜனசேனா கட்சியை 21 இடங்களில் வெற்றி பெறவைத்துள்ளார். நியாயமாக பார்த்தால் பவன் கல்யாண் தான் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறாமல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் துணை முதல்வராகி உள்ளார். இதை அக்கடதேசத்தில் யாருமே எதிர்பார்க்கவில்லை..

நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பவன் கட்சி வெற்றி எப்படி பெரிய தலைப்புச் செய்தியானதோ அதே அளவுக்கு அவரது மனைவி அன்னா லெஷ்னேவா வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றி பெற்ற தனது கணவனை இந்திய முறைப்படி தனது கணவரை ஆரத்தி எடுத்து வரவேற்ற அன்னா லெஷ்னேவா இந்தியரே இல்லை. அவர் ரஷ்யாவை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் பவன் கல்யாண் யார்? பவன் கல்யாண் மனைவி பெயர் என்ன? அவரது முதல் மனைவி யார்? அவரது கட்சியின் பெயர் என்ன? அதிகமாக தேட தொடங்கினார்கள் பலர்.

அதில் வந்த தகவலை தான் பார்க்க போகிறோம். பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா ஒரு ரஷ்யப் பெண். இவர் ஒரு மாடல் மற்றும் நடிகையாவார். 1980களில் பிறந்த இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகிற்குள் வந்தார். ‘தீன் மார்’ படப்பிடிப்பில் அவர் முதன்முதலாக பவன் கல்யாணைச் சந்தித்தார். அதன் மூலம் ஒரு நட்பு மலர்ந்தது. அது பிறகு காதலாக மாறியது. இவர்களின் திருமணம் செப்டம்பர் 30, 2013 இல் நடந்தது. இந்த ரஷ்ய மாடல் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி ஆவார்.

அன்னா லெஷ்னேவா ஏற்கனவே கல்யாணமானவர். ஆகவே அவருக்கு திருமணத்திற்கு முன்பே, பொலேனா அஞ்சனா பவனோவா என்ற ஒரு மகள் இருக்கிறார். தற்போது ஒரு மகன் இருக்கிறார்.

அன்னா லெஷ்னேவா மாடலிங் தொழிலைத் தவிர ரஷ்யா, சிங்கப்பூரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1800 கோடி என்று சொல்கிறார்கள்.

பவன் கல்யாணை பொறுத்தவரை 1997 முதல் 2008 வரை அவர் முதல் மனைவி நந்தினியுடன் வாழ்ந்தார். பின்னர் நடிகை ரேணு தேசாய் திருமணம் செய்து கொண்டார். அந்த உறவு 2009 முதல் 2012 வரை நீண்டது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது மனைவியாக அன்னா லெஷ்னேவாவை திருமணம் செய்தார். பவன் கல்யாண் அரசியலில் வெற்றி பெற அன்னாவும் முக்கிய காரணம் என்கிறார்கள். தனது கணவருக்கு பக்கபலமாக இருந்த அன்னா,வெற்றிக்குப் பிறகு ஆரத்தி எடுத்து வரவேற்று பூரிக்க வைத்துள்ளார்.