bullet atm | அமெரிக்காவில் மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகள் வாங்கலாம்.. ஏடிஎம்கள் திறப்பு

By Keerthana

Published:

வாஷிங்டன்: அமெரிக்காவில் மளிகை கடைகளில் இனி துப்பாக்கிகளுக்கு தோட்டாக்களை வாங்கலாம். அதற்கு என்று பிரத்யேமாக ஏடிஎம் போன்ற வெண்டிங் இயந்திரங்களை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிகள் விற்பனை என்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது. சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாக அங்கு துப்பாக்கி விற்பனை நடக்கிறது. 18 வயது நிறைவு பெற்ற யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் வாங்க முடியும்.

பலரும் துப்பாக்கி வைத்துள்ளார்கள். அவர்கள் அவசரத்திற்கு துப்பாக்கி குண்டு வாங்க முடியாத நிலை இருக்கிறது. அந்த நிலையை மாற்றுவதற்காக புதிய திட்டத்தை அமெரிக்காவில் உள்ள 3 மாநிலங்கள் சோதனை முயற்சியாக செய்துள்ளன. துப்பாக்கி குண்டுகளை மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படகிறது. . இதற்காக மளிகை கடைகளில் காசு கொடுத்தால் துப்பாக்கி குண்டுகளை தரும் ஏடிஎம் இயந்தியரங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

ஆரம்பகட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகளுக்குத் தேவையான குண்டுகள் நிரப்பப்பட்ட தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கி குண்டு வெண்டிங் மிஷினில் குண்டு வேண்டும் என்போர், தங்கள் துப்பாக்கியின் லைசென்ஸ் ஐடியை ஸ்கேன் செய்து, உரிய பணம் செலுத்தி 24 மணி நேரமும் துப்பாக்கி குண்டுகளை எடுக்க முடியும்..

துப்பாக்கி குண்டுகளை எல்லாரும் வாங்கிவிட முடியாது. துப்பாக்கியின் லைசென்ஸ் ஐடியை முகத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை கண்டுபிடிக்க AI தொழில்நுட்பம் அந்த இயந்திரத்தில் இருக்கிறது. . அத்துடன் அட்டையை ஸ்கேனிங் திறன்கள் ஸ்கேன் செய்யும் மற்றும் முகத்தை அடையாளம் காணும் மென்பொருளும் உள்ளது. எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே தோட்டாக்கள் உங்களுக்கு வரும்..

இல்லாவிட்டால் வராது. அமெரிக்காவில் தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் தரவுகளின்படி, அலபாமா என்ற பகுதி தான் அமெரிக்காவில் நான்காவது அதிக துப்பாக்கி இறப்பு விகிதம் உள்ள மாநிலம் இருக்கிறது . அங்கு தான் துப்பாக்கி தோட்டாக்கள் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது.