என்னை பழிவாங்கணும்னா நான் பனையூருக்கு வரேன்.. விஜயை சீண்டி விடியோ போட்ட ஜூலி!…

தவெக தலைவர் விஜய் சில நாட்களுக்கு முன்பு வேலூரில் பேசியபோது ஜல்லிக்கட்டு பற்றி ஒரு குட்டிக்கதை சொன்னார். ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை பெரியவர்கள் அடிக்க முடியாமல் போனபோது ஒரு சின்ன சிறுவன் அந்த மாடு…

julie

தவெக தலைவர் விஜய் சில நாட்களுக்கு முன்பு வேலூரில் பேசியபோது ஜல்லிக்கட்டு பற்றி ஒரு குட்டிக்கதை சொன்னார். ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை பெரியவர்கள் அடிக்க முடியாமல் போனபோது ஒரு சின்ன சிறுவன் அந்த மாடு பசியில் இருப்பதை புரிந்துகொண்டு புல்லுக்கட்டை காட்டி அந்த மாட்டை அடக்கியதாக சொல்லியிருந்தார். அந்த மாடுதான் அரசியல். அந்த சின்ன பையன்தான் தவெக என சொன்னார். இதையடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகை ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டார்..

அதில், விஜய் அண்ணா நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வாங்கினோம். நீங்க சொன்ன குட்டிக் கதையை கேட்டு சின்ன பசங்க மாடுகிட்ட போய் ஏதாவது ஆயிடபோகுது’ என்று பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த விஜயின் ரசிகர்கள் அந்த வீடியோவின் கீழ் போய் அவரை திட்டி கமெண்ட் போட்டனர். சிலர், ‘நீ ஃபேமஸ் ஆக விஜய்தான் உனக்கு கிடைச்சாரா?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ள ஜூலி ‘நான் வெளியிட்ட வீடியோவுக்கு கீழ விஜய் ரசிகர்கள் மோசமா கமெண்ட் போடுறாங்க. அவங்க எல்லாருமா மைனர் பசங்க.. ஃபேக் அடியில் இருந்துதான் பேசுறாங்க. என்னை சேர்ந்தவர்களையும் திட்டுறாங்க.. ஆனால் என்னை திட்றது மக்களை திட்றது போல என சொல்லி யாரையும் இழுத்து விடமாட்டேன்.. என்னை திட்டினா அது என்னை திட்டின மாதிரிதான்.. நீங்க என்னை பழிவாங்கணும்னு நீங்க நினைச்சா நான் வீட்ல இருப்பேன். இல்ல ஆபிஸ்ல இருப்பேன்.. நீங்க வருமாட்டீங்கன்னா நானே பனையூருக்கு வரேன். உங்க ஃபேன்ஸ் போடுற கமெண்ட்ஸ்லாம் போய் படிச்சி பாருங்க’ என்று அதில் பேசியிருக்கிறார்.