பளபளன்னு வந்த பார்சல்.. ஆசையாய் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே பதுங்கியிருந்த விஷ ஜந்து..

இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் மோகம் மிக அதிகமாகி விட்டது. எனவே தினமும் லட்சக்கணக்கான பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு தொடரச்சியாக பல்வேறு ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி பல்வேறு வகையான பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

அப்படி வாங்கும் பொருட்கள் நன்கு பேக்கிங் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் பேக்கிங்கில் உள்ள பொருட்கள் மாறி விடுகின்றன. இது தொடர்கதையாகி வருகிறது. உணவு ஆர்டர் செய்தால் வேறு பொருள் வருவது, பல்லாயிரம் மதிப்பில் ஆர்டர் செய்தால் வெறும் சோப்பு டப்பா வருவது என கூத்துக்களும் அரங்கேறி வருகிறது.

இதில் தற்போது உச்சபட்சமாக அமேசான் தளத்தில் ஆர்டர் செய்தவருக்கு வந்துள்ள பொருள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களுரைச் சேர்ந்த தம்பதிகள் அமேசானில் கேமிங் விளையாடக் கூடிய X Box Controller சாதனத்தை ஆர்டர் செய்துள்ளனர். எப்போதுடா வரும் ஆசையாக விளையாடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சொன்ன தேதியில் பார்சல் டெலிவரி செய்யப்பட்டது.

அன்று காய்கறி விற்பனையாளர் இன்று பிரபல காமெடி நடிகர்…இமான் அண்ணாச்சி ஜெயித்த கதை

அழகான பேக்கிங்கை ஆசையுடன் பிரித்துப் பார்த்தபோது அவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. உள்ளே சிறிய நாகப் பாம்பு ஒன்று உயிருடன் இருந்ததைக் கண்டு அலறி தூக்கி எறிந்தனர். அப்போது அந்தப் பாம்பு டெலிவரி அட்டைப் பெட்டியில் உள்ள ஸ்டிக்கரில் ஒட்டிக் கொண்டு வெளியே வரத் துடித்தது.

இதனால் அவர்கள் அதிர்ச்சி ஆகினர். உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் சேவைத் தளத்திறகுத் தெரியப்படுத்த அவர்கள் வருத்தம் தெரிவித்து பணத்தையும் திருப்பி அளித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வடிவேலு பாணியில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி பார்சலைப் பிரிக்கும் போது கவனமுடன் பிரிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.