பத்திரிக்கையிலே இவ்வளவு பிரம்மாண்டமா? வைரலாகும் அம்பானி வீட்டுக் கல்யாண பத்திரிக்கை..

மும்பை : உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதியின் இளைய மகனான ஆன்ந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டுக்கும் வருகிற ஜுலை 12-ம் தேதி இந்தியாவே மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குஜராத்தின் ஜாம் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் உலகின் முக்கிய தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசி விஸ்வநாதர் கோவிலில் நீடா அம்பானி பத்திரிக்கையை வைத்து வழிபட்டார். பின்பு அவர் சாலையோர ஒரு சிறிய கடையில் அமர்ந்து உணவருந்தியது வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

உலகின் முன்னனி பணக்காரர் வீட்டுத் திருமணம் என்றால் சும்மாவா.. அதிலும் தன் பிரம்மாண்டத்தைக் காட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. தகதகவென ஜொலிக்கும் ஒரு சிறிய அளவிலான பெட்டியே காண்போரை வியக்க வைக்கிறது. உள்ளே என்ன இருக்குமோ என்று எதிர்பார்க்கத் தூண்டுகிறது. இப்பெட்டியைத் திறந்தவுடன் ஒரு சிறிய கோவில் போன்ற தோற்றம் அளிக்கிறது.

முதன் முதலாக மேடையில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்.. நீட், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து

மேலும் பக்திப் பாடலும் உடன் இசைக்கிறது. பக்திப் பாடலைக் கேட்டுக் கொண்டே நம்மை வரவேற்பது பகவான் விஷ்ணுவின் படம். இந்தப் படத்தினை நாம் தனியாக எடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனையடுத்து விநாயகர் பிரேம் போட்ட படமும் நம்மை வியக்க வைக்க, அதற்கு அடுத்ததாக இவர்களது திருமண அழைப்பிதழ் இடம்பெற்றுள்ளது. அதில் திருமண விபரங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்க அதன்பின் உள்ள ஒரு பக்க்த்தினைத் திறந்தால் அழகான கையெழுத்தில் அம்பானி குடும்பத்தின் வரவேற்பு மடல் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த பகுதியாக துர்க்கை படமும், அதற்கு அடுத்து கடைசியாக மீண்டும் விஷ்ணு, மகாலட்சுமி இணைந்து இருக்கும் படங்களும் காண்போரை வியக்க வைக்கிறது. மேலும் பெட்டியின் பின்னனியில் அழகான இயற்கைக் காட்சிகளுமாக மொத்தத்தில் இது பத்திரிக்கையா இல்லை மினி கோவிலா என்று ஆச்சர்யப் படவைக்கும் அளவிற்கு பல அதிசயங்கள் இப்பத்திரிக்கையில் உள்ளன.