அமெரிக்கா போக ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி.. உடனே நிறைவேற்றிய நடிகர் நெப்போலியன்

By Keerthana

Published:

சென்னை: தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதி, அமெரிக்கா செல்ல வேண்டும் என்று ஏழு ஆண்டுகளாக ஆசைப்பட்ட நிலையில் நடிகர் நெப்போலியன் அந்த ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார்.ஹீரோவாகவும் நடித்துள்ளார். நிஜவாழ்க்கையில் பலருக்கும் உதவிகளை சத்தமில்லாமல் செய்து ஹீரோவாக இருக்கிறார்.

ஒரு காலத்தில் எம்பியாகி மத்திய அமைச்சராக செட்டில் ஆகி இருந்த நெப்போலியன், அதன்பினனர் மகனுக்காக சினிமா அரசியல் என இரண்டையும் விட்டு விட்டு அமெரிக்காவிற்கு சென்று குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்டார். நெப்போலியன் ஜேயசுதா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள்

இதில் மூத்த மகன் தனுஷ்க்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். மகனை காப்பாற்ற அவர் பல மருத்துவமனைகளை நாடினார். ஒருமுறை திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஊரில் பாரம்பரிய முறையில் இதற்கு மருத்துவம் பார்ப்பது தெரியவர அங்கு தன்னுடைய மகனை அழைத்து சென்றார்.

பிறகு தன்னுடைய மகனின் உடல்நிலையில் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கியதும் தன்னுடைய மகனின் நிலைமை இனி எந்த குழந்தைகளுக்கும் வரக்கூடாது என்று அவர் யோசித்தார். அதற்காக அந்த ஊரிலேயே ஒரு பெரிய மருத்துவமனையை நெப்போலியன் கட்டி கொடுத்துள்ளார்

ஒரு முறை அமெரிக்கா சென்ற போது, அவரது மகன் தனுஷ்க்கு அங்குள்ள சூழல் பிடித்து போக அங்கேயே இருக்க விரும்பியுள்ளார். இதையடுத்து மகனுக்காக நெப்போலியன் அமெரிக்காவில் போய் செட்டில் ஆகிவிட்டார. நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் பிசினஸ் செய்து வருகிறார்.

நெப்போலியனின் மகன் தனுஷ்க்கு திருமணம் நிச்சயக்கப்பட்டள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவர் சென்னையில் நேரடியாக வந்த நெப்போலியன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து அவருக்கு நிச்சயதார்த்த பத்திரிக்கையை கொடுத்துள்ளார். அதுபோல தன்னுடைய மகன் அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்று தெரிவித்தார்.

நெப்போலியன் அண்மையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது நண்பரான விஜயகாந்த் வீட்டிற்கு தன்னுடைய மனைவியுடன் சென்றார். அங்கு விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனிடையே தற்போது சென்னையில் இருக்கும் நடிகர் நெப்போலியன், தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஏழு ஆண்டு ஆசையை நிறைவேற்றியுள்ளார். அமெரிக்கா செல்ல வேண்டும் என 7 ஆண்டுகளாக ஏங்கிய அவரின் கனவு நடிகர் நெப்போலியன் மூலம் நனவாக்கி உள்ளார்.

இதுபற்றி நெப்போலியனிடம் வீடியோ காலில் பேசிய மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதி, என்னை உங்கள் குடும்பத்தினர் அமெரிக்காவில் நன்றாக பார்த்துக் கொண்டார் சார். உங்கள் அன்புக்கு நன்றி. கண்டிப்பாக வருவேன் . என்னை கிருத்திகா ஆண்டி சாப்பாடு போட்டு நல்லா பார்த்துக் கொண்டார்கள்.. செப்டம்பர் வரை அமெரிக்காவில் தான் அங்கிள் இருப்பேன். செப்டம்பர் 11ம் தேதி கிளம்புகிறேன் என்றார். அதற்கு நெப்போலியன் இந்த மாதக்கடைசியில் அமெரிக்கா வருகிறேன். நாம் ஆகஸ்ட் மாதம் நாம் சந்திப்போம் என்றார்.