2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்

சென்னை: பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தபால்துறை அறிவித்துள்ளது.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி போட்ட முதல் கையெழுத்தே பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் 17வது தவணை தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட ஒப்புதலுக்குத்தான். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வழங்க 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக நேற்று முன்தினம் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது . இந்நிலையில் 2000 ரூபாய் வணத்தை எடுத்துக்கொள்ள வசதியாக தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தபால்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தபால் துறை வெளியிட்ட அறிவிப்பில், பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் கடந்த 18ம் தேதி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தவணைத் தொகையை தபால் துறையில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வசதியை பயன்படுத்தி அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் கட்டணம் இன்றி எடுத்துக் கொள்ள முடியும்

பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைத்துள்ள எந்த ஒரு வங்கிக் கணக்கில் இருந்தும் அருகில் உள்ள தபால் அலுவலகங்கள், தபால்காரர், கிராமிய தபால் ஊழியர்கள் மூலம் கட்டணம் இன்றி ரூ.10 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக வருகிற ஜூனு 30-ந் தேதி வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளத.

இது தவிர இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் வேலை உறுதித் திட்ட பயனாளிகள், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி ஊக்கத்தொகை மற்றும் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டப் பயனாளிகள், சிலிண்டர் மானிய பயனாளிகள், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்ட பயனாளிகள் ஏ.டி.எம். எந்திரத்தை தேடிச் செல்லும் நிலையை தவிர்த்து அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம்” இவ்வாறு தபால் துறை அறிவித்துள்ளது.