தமிழக காவல் துறையினருக்கு கருணைத் தொகையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. காவல் துறையினர் வரவேற்பு

சென்னை : தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து நாட்டின் காவல்துறைக்கு நிகராகப் போற்றப்பட்டு வருகிறது. ஏனெனில் திறமை வாய்ந்த அதிகாரிகள், துப்பறியும் திறன், சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருப்பது, சட்டத்தினை மீறுபவர்கள் மீது இரும்புக் கரம் கொண்டு அடக்குவது, வழக்குகளை குறுகிய காலத்தில் திறம்பட விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது போன்றவற்றில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கலவரம், போராட்டம் போன்ற காலங்களில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பொது மக்களுக்கு காவலனாகவும் திகழ்கின்றனர்.

உலக அளவில் பல்வேறு விருதுகளையும் தமிழ்நாடு காவல்துறை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் அனைத்து கடைநிலை முதல் உயர்நிலை வரையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு பணியின் போது திடீரென உயிரிழப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும்போது ஏற்படும் காயங்கள், ஊனங்கள் போன்றவற்றிற்கு அவர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ராணுவத்தில் பணியின் போதும், போரின் போதும் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலமாக பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாகப் பிடிபட்ட கும்பல்.. காரணத்தை தெரிஞ்சா அதிர்ந்து போயீருவீங்க..

இந்நிலையில் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காவல் துறையினருக்கு தற்போது கருணைத் தொகையினை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன்படி இன்று காவல்துறை, தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்குப் பின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், பணியின் போது உயிரிழக்கும் அனைத்து காவல் ஆளிநர்கள் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சமும், சிறப்பு இலக்குப் படை ஆளிநர் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சமும், அதே போன்று கை, கால்கள் இழப்பு, பார்வைத் திறன் இழப்பு போன்றவற்றிற்கு அனைத்து காவல் ஆளிநர்களுக்கு ரூ. 12 லட்சமும், சிறப்பு இலக்குப் படை ஆளிநர்களுக்கு ரூ.15 லட்சமும், பகுதி செயல் இழந்தவர்களுக்கு ரூ. 7.5 இலட்சம், 10 லட்சம் வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தீக்காயம், குண்டடி காயம், எலும்பு முறிவு போன்றவற்றிற்கு ரூ. 4.5 இலட்சம், 7 லட்சமும், கொடுங்காயத்திற்கு 2 லட்சம், 3 லட்சமும், அனைத்து நிலை சிறு காயங்களுக்கு ரூ.50,000, சிறப்பு ஆளிநர்களுக்கு ரூ. 1லட்சமும் உயர்த்தி வழங்கப்படும் என சட்டபேரவையில் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு அனைத்து காவல் துறையினரும் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.