கும்பம் புத்தாண்டு ராசி பலன் 2022!

கோபுர கலசம் போன்ற புகழ் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!!

உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் பக்கபலமாக இருக்கப்போகும் கிரகங்கள் குரு பகவான் மற்றும் ராகு பகவான் ஆவார்கள்.

27.12.2020 முதல் உங்களுடைய ராசிக்கு ஏழரைச் சனியின் முதல் பகுதியான விரையச் சனி ஆரம்பமாகியுள்ளது. விரைய சனி காலம் இந்த வருடம் முழுவதும் இருக்கிறது. உங்களுக்கு அளவுக்கு மீறிய அலைச்சலை விரயச்சனி தரும்.

இந்த வருடம் முழுவதும் நீங்கள் எக்காரணம் கொண்டும் யாருக்கும் கடன் வாங்கித் தராமல் இருப்பது நன்று. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

கும்பம் 2

13.11.2021 குருபகவான் உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக பெயர்ச்சியாகி உள்ளார் . பெரும்பாலான ராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவால் நன்மைகள் கிடைக்காது. ஆனால் கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு குரு பகவான் முழு யோகாதிபதியாக இருப்பதால் ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.

13.4.2022 அன்று உங்களுடைய கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். ஒரு வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் குரு பகவான் இருப்பார். இது உங்களுக்கு நன்மைகளையும் வருமானத்தையும் அதிகப்படுத்தி தரக்கூடிய காலகட்டமாகும். கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் கைகூடும்.

திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு மேற்பட்டு வாழ்ந்து வரும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும் சூழ்நிலையை மீன குரு வழங்குவார்.

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு தங்க நகைகள் வாங்க கூடிய யோகம் உண்டாகும்.

கும்பம் 3

மார்ச் மாதம் 3ஆம் வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகு பகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். அதே நாளில் கேதுபகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்தை இடத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதுவும் மகத்தான நன்மைகளை வாரி வழங்கும் கிரக அமைப்பு ஆகும்.

மார்ச் மூன்றாம் வாரத்தில் இருந்து இந்த வருடம் முழுவதும் ஏராளமான ஆன்மிக பயணங்கள் நீங்கள் செல்லக் கூடிய சூழ்நிலை உண்டாகும். அதுதவிர இந்த 2022 ஆம் வருடத்தில் முதல் நான்கு மாதங்களுக்குள் உங்களுக்கு பூர்வீக சொத்து கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாகும்!

ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணி புரிந்தவர்களுக்கு இரட்டை பதவி உயர்வு கிடைக்கும்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவிகள் இந்த வருடம் கல்வியில் ஒரு சாதனை நிகழ்த்துவார்கள்.

ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த வருடத்தில் சுப கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும் .

20.12.2023 அன்று உங்களுக்கு ஜென்மச் சனி ஆரம்பமாக இருக்கிறது. எனவே நீங்கள் இந்த பதிவை வாசித்த நாள் முதல் அசைவம் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும். அதன்பிறகு சனிபகவானின் குருவாக போற்றப்படும் பைரவர் ஜெபம் செய்து வர வேண்டியது அவசியமாகும் .

இந்த வருடம் முழுவதும் நீங்கள் மற்றவர்களுக்கு தர வேண்டிய கடன்களை முழுமையாக தீர்ப்பதற்கு முயற்சி செய்யலாம்.

கும்ப ராசியில் பிறந்த அன்பர்கள் இந்த வருடம் முழுவதும் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது. மது அருந்தக் கூடாது. இந்த இரண்டு கட்டுப்பாட்டையும் யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தினமும் பைரவ மந்திரம் ஜெபித்து வரலாம்.

‘ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை எழுதிக்கொண்டு அல்லது ஜெபித்து கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி அன்றும் உங்கள் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கே நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அத்தர்,புனுகு, ஜவ்வாது, சந்தனாதி தைலம், செவ்வரளி மாலை, பால் போன்ற பொருட்களை அபிஷேகத்திற்கு தரவேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலமாக விரயத்தை விட வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலையை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழங்குவார்.

இந்த வருடத்தில் உலக ஜனன ஜாதகப்படி ஒரு சில வைரஸ் பரவல்கள் உண்டு. அப்படி இருந்தாலும் கூட அதையும் மீறி மேலே கூறிய நல்ல பலன்கள் மெதுவாக உங்களுக்கு கிடைத்தே தீரும் .

மேலே கூறிய பரிகாரங்களை செய்ய இயலாமல் இருக்கும் கும்ப ராசி அன்பர்கள் தினமும் உங்கள் தெருவில் இருக்கும் பைரவ வாகனங்களான நாய்களுக்கு உணவு தானம் செய்து வருவது நன்று.

நீங்கள் தரும் உணவை பைரவ வாகனங்கள் சாப்பிடும் பொழுது அதை பார்த்தவாறு ‘ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை ஜெபிக்கலாம். இது மிகவும் எளிமையான, அதே சமயம் சக்தி வாய்ந்த பைரவர் பரிகாரங்களில் ஒன்றாகும்.

ஜோதிடர் வீர முனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499.

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews