இந்தியாவில் எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் நுழைய முகேஷ் அம்பானி எதிர்ப்பு: என்ன செய்ய போகிறார் மோடி?

இந்தியாவில் ஸ்டார்லிங்க் தனது இணையதள சேவையை தொடங்க அனுமதி கேட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இதற்கு முகேஷ் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, எலான் மஸ்க் அவர்களை சந்தித்தார் என்பதும் இந்த சந்திப்பின்போது தனது ஸ்டார்லிங் பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் முகேஷ் அம்பானி இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவித்ததாக குணப்படுகிறது.

எலான் மஸ்க் அவர்களின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் நுழைந்தால் தனது ஜியோ நிறுவனத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறப்படுவதாக தெரிகிறது. ஸ்டார்லிங் நிறுவனத்தை பொருத்தவரை அது சேட்டிலைட்டில் இருந்து நேரடியாக பிராட்பேண்ட் சேவையை அளித்து வருவதால் மிகக் குறைந்த விலையில் கிராமத்திற்கு கூட இன்டர்நெட் கிடைக்கும் நிலை ஏற்படும்.

ஆனால் தற்போது கேபிள்கள் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்கி வரும் ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் பிரதமர் மோடி ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி கொடுப்பாரா அல்லது முகேஷ் அம்பானியின் எதிர்ப்புக்கு செவிமடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் ஒரு புரட்சி வேண்டும் என்றால் கண்டிப்பாக ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்று ஏராளமானோர் கூறி வருகின்றனர். இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews