அடுத்த வருஷம் சிஎஸ்கேவுக்கு தான் கப்.. விமர்சித்த ஆர்சிபி ரசிகர்களின் வாயை அடைக்க வைத்த சூப்பர் தகவல்..

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வி அடைந்த சமயத்தில் பெங்களூரு ரசிகர்கள் செய்த அட்டூழியம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. சின்னசாமி மைதானத்தில் போட்டியை பார்த்து விட்டு வந்த சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரையும் வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்தி அவர்களை மிகப்பெரிய அளவில் கலாய்த்திருந்ததுடன் மட்டுமில்லாமல் ஆக்ரோஷமான கோஷங்களையும் சிஎஸ்கேவுக்கு எதிராக எழுப்பியிருந்தனர்.

இதனால் கடைசி வரைக்கும் போட்டியை பார்த்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் உருவாக நிச்சயமாக பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்து ஆர்சிபி வெளியேற வேண்டும் என்றும் கோபத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் ஆர்சிபி வெற்றி பெற்றால் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் ஒரே ஒரு தோல்வியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போன சிஎஸ்கேவை விமர்சித்து வரும் ஆர்சிபி ரசிகர்களுக்கு தரமான ஒரு பதிலடியை சிறப்பான புள்ளி விவரங்களுடன் கொடுத்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள்.

ஐபிஎல் தொடர் என வந்துவிட்டாலே கம்பேக் கொடுப்பதை தான் வழக்கமாக வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் ஐபிஎல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்திருந்த சென்னை அணி, 2016 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில் தடை காரணமாக ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த வேகத்தில் ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி இருந்தது சிஎஸ்கே.

இதேபோல அடுத்தடுத்த சீசனிலும் வெளிப்படுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக 2020 ஆம் ஆண்டு தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. அதற்கு முன்பு வரை ஐபிஎல் தொடரில் ஆபத்பாந்தவானாக இருந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் முறையாக பிளே ஆப் சுற்றுடன் வெளியேற, 2021 ஆம் ஆண்டிலேயே கோப்பையை கைப்பற்றி இருந்தது.

இப்படி 2022 ஆம் ஆண்டு 2 வது முறையாக பிளே ஆப் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே, மீண்டும் 2023 ஆம் ஆண்டில் திரும்ப வந்து கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றி இருந்தது. அந்த வகையில், தற்போதும் லீக் போட்டிகளுடன் 3 வது முறையாக வெளியேறி உள்ள சிஎஸ்கே, இதற்கு முன்பு போல அதிரடி கம்பேக் கொடுத்து நிச்சயம் கோப்பையை அடுத்த சீசனில் கைப்பற்றி ஒரு அளவுக்கு மேல் சீன் போட்ட ஆர்சிபிக்கு தரமான பதிலடியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews