ஷூட்டிங் ஸ்பாட்டில் துணை நடிகையை அழைத்து வரச் சொன்ன எம்.ஜி.ஆர்.. பதறிப்போன நடிகைக்கு காத்திருந்த ட்விஸ்ட்

திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் தன்னை ஏற்றி விட்டவர்களுக்கு நன்றி மறவாமல் அவர்கள் கஷ்டப்படும் நேரங்களில் அள்ளக் அள்ளக் குறையாமல் அள்ளிக் கொடுத்து வாழ வைத்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர். தான் சிறுவயதில் நாடகங்களில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த சீனியர் நடிகையை அடையாளம் கண்டு அவர் வாழ்வில் ஏற்றம் பெற உதவியிருக்கிறார்.

ஒருமுறை அந்த நடிகை எம்.ஜி.ஆர் படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்து வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது படபிடிப்பு தளத்தின் உள்ளே நுழைந்த எம்ஜிஆர் தன் அறைக்கு போகாமல் இந்த நடிகையை சற்று உற்றுப் பார்த்து விட்டுப் போய்விடுகிறார்.

சிறிது நேரத்தில் உதவி இயக்குனர் ஒருவர் அந்த நடிகையிடம் வந்து, “உங்களை சின்னவர் அழைக்கிறார் என்றதும். உடல் முழுதும் வியர்த்துப் போகிறது அந்த நடிகைக்கு. ‘வசனத்தில் நடிப்பில் நாம் தவறேதும் செய்து விட்டோமா?“ என்ற சிந்தனையோடு உள்ளே சென்றவரை உட்காரச் சொன்னர் மக்கள் திலகம்.

எம்.ஜி.ஆர்., நேரிடையாக அந்த நடிகையிடமே கேட்கிறார், “உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப சுத்தமாக இருந்தது. சினிமாவில் நடிக்கறதுக்கு முன்னால் ஏதாவது நாடக அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கா?” அந்த நடிகையும், “தாம் சிறுமியாக இருந்த போதிலிருந்தே நாடக நடிகை தான்” என கூறி தனது நாடகக் கம்பெனியின் பெயரையும் ஊரையும் குறிப்பிடுகிறார்.

நடிச்சா ஹீரோயின்தான்.. அடம்பிடித்த ஆச்சி மனோரமா.. சமாதானம் செய்து காமெடியில் இறக்கிய கண்ணதாசன்

உடனே முகம் மலர்ந்த எம்.ஜி.ஆர்.”அங்கே சக்ரபாணி, ராமச்சந்திரன்னு ரெண்டு பேரு நடிச்சிட்டிருந்தாங்களே உங்களுக்கு நினைவிருக்கா?” என்ற எம்.ஜி.ஆரின் கேள்விக்கு, “ஆமாம் நடிச்சிட்டிருந்தாங்க! அதிலே சின்னவன் சிவப்பா அழகா துறுதுறுன்னு இருப்பான்” என்று அந்த நடிகை பதில் சொல்ல, வேகமாக எழுந்த எம்.ஜி.ஆர், “அந்த சிவத்தப் பையன் தாங்க இந்த எம்.ஜி.ஆர்ன்னு” உணர்ச்சியுடன் சொல்ல, அந்த நடிகையும் கண்களில் நீர் ததும்ப எம்.ஜி.ஆரை சகோதர பாசத்துடன் கட்டிக் கொள்கிறார்.

“இவ்வளவு வருஷமாக ஒரே நாடகக் குழுவைச் சேர்ந்தவங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுக்காமலேயே இருந்துட்டோமே” என்று சொல்லி எம்.ஜி.ஆரும் நெகிழ்கிறார்.பின்னர் அந்த நடிகையின் குடும்பப் பின்னணியைக் கேட்டறிந்த எம்ஜிஆர், அதற்குப் பின் தன் பெரும்பாலான படங்களில் அந்த நடிகைக்கு வாய்ப்பு தருகிறார்.

அரசியல்ல பரம எதிரி.. தொழில்ல செம போட்டி.. ஆனாலும் இணைபிரியாத இரு ஆளுமைகள்

அந்த நடிகை வேறுயாருமல்ல அவர் தான் ‘மெட்டி ஒலி’ போன்ற ஏராளமான சின்னத்திரை தொலைகாட்சி தொடர்களில் நடித்த சண்முகசுந்தரி. மேலும் மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவின் அம்மாவாக வந்து காமெடியில் அசத்தியிருப்பார். அவரது மகள் தான் பின்னணிப் பாடகி டி.கே.கலா. அவருக்கும் எம்.ஜி.ஆர்., பல்லாண்டு வாழ்க, உழைக்கும் கரங்கள் போன்ற படங்களில் பின்னணிக்கு வாய்ப்பு தருகிறார்! எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் பற்றி சண்முக சுந்தரி கூறும் போது, “கூடப் பொறந்தவங்களே கொஞ்சம் வசதி வந்துட்டா மதிக்காத இந்த காலத்துல பல ஆண்டுகளுக்கு முன்னாடி நாடகத்துல ஒண்ணா நடிச்சதை நினைவு வைத்து உதவிய எம்.ஜி.ஆர் ஒரு இமயமலைங்க” என்றார் சண்முக சுந்தரி கண்களில் கண்ணீர் ததும்ப.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.