ஊமை விழிகள் ஒரு பாடலில் இம்பிரஸ் ஆன கேப்டன் விஜயகாந்த்.. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு நடித்துக் கொடுத்தது இப்படித்தான்..

கேப்டன் விஜயகாந்தின் சினிமா வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது 1986-ல் வெளியான ஊமை விழிகள் திரைப்படம் தான். வயதான டி.எஸ்.பி. வேடத்தில் கேப்டன் விஜயகாந்த் கச்சிதமாகப் பொருந்தியிருப்பார். இந்தப் படம் மூலம் முதன்முதலாக திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு புது உத்வேகத்தைக் கொடுத்து அவர்கள் வளர்ச்சியில் உறுதுணையாக நின்றார் கேப்டன். இந்தப் படத்தினை இயக்கியவர் அரவிந்தராஜ்.

அப்போது திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆபாவணன் என்ற மாணவர் தன் இதர மாணவர்களுடன் இணைந்து இந்தப் படத்தினைத் தயாரித்தார். இசை மனோஜ் கியான் என்ற இந்தி இசையமைப்பாளர்கள். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அனைத்து நடிகர்களும் தேர்வான நிலையில் டி.எஸ்.பி கதாபாத்திரத்திற்கு சரியான நடிகரைத் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது நடிகர் சிவக்குமாரை அணுக அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்பதால் சற்றே யோசித்திருக்கிறார்.

இதனையடுத்து நடிகர் வாகை சந்திரசேகர் இந்தக் கதாபாத்திரத்திற்கு விஜயகாந்தை நடிக்க வைக்கலாம் என யோசனை தெரிவிக்க ஆனால் அவர் வயதான டிஎஸ்பி கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் கேட்டுப் பார்க்கலாம் என எண்ணி அவரின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரை அணுகியிருக்கின்றனர். ராவுத்தரும் படக்குழுவினைப் பற்றி விஜயகாந்திடம் கூறியிருக்கிறார். ஒருநாள் விஜயகாந்த் அவர்களை அழைத்து கதை கேட்டிருக்கிறார்.

மேலும் டி.எஸ்.பி கதாபாத்திரம் தவிர்த்து ஏனைய காட்சிகளை அவரிடம் போட்டுக் காண்பித்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நிலைமாறும் உலகில்..’ என்ற பாடலைக் கேட்டவுடன் கேப்டன் விஜயகாந்த் மிகவும் இம்பிரஸ் ஆகியிருக்கிறார்.

முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட கவிஞர் சினேகன்.. அதன்பின் அமீர் கொடுத்த வாய்ப்பால் பாடாலாசிரியராக மாறிய கதை

இதனையடுத்து இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார். அப்பேதைய திரில்லர் படமாக விளங்கிய ஊமை விழிகள் எதிர்பார்த்ததற்கும் மேலாக மாபெரும் வெற்றியடைந்தது. குறிப்பாக பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் இடம்பெற்ற தோல்வி நிலையென நினைத்தால் பாடலை இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கீதமாக ஏற்று பிரபாகரன் கடைப்பிடித்தார்.

இவரது ஞாபகார்த்தமாகவே கேப்டன் விஜயகாந்த் தனது மகனுக்கும் பிரபாகரன் என்று பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...