பிக்பாஸ் மணிச்சந்திரா குடும்பத்தில் இணைந்த புதுவரவு…

மணிச்சந்திரா சின்னத்திரையில் பிரபலமான நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர் ஆவர். 2015 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு 2016-17 இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி சீசன் 9’ இல் பங்கேற்றார். இவருக்கு ஜோடியாக பிரியா பங்கேற்றார். கலந்துக் கொண்டு அந்த சீசனின் வெற்றியாளர் ஆனார். அதன் பின்பு விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் நடன இயக்குனராக பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். எந்த சூழ்நிலையிலும் நிதானமாக கையாண்டதன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று மேடை வரை வந்து முதல் ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார்.

தற்போது மணிச்சந்திரா குடும்பத்தில் புதுவரவாக ஒன்று இணைத்துள்ளது. அது என்னவென்றால் ரூ. 12 இலட்சம் மதிப்பிலான மஹிந்திரா தார் காரை மணிச்சந்திரா வாங்கியுள்ளார். அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதத்தால் இது நடந்தது என்று பதிவிட்டிருந்தார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...