ஒரே பாடலில் பல உணர்வுகள்… கண்ணதாசனும், இளையராஜாவும் செய்த மேஜிக்..!

ஒரு பாடலில் பல உணர்வுகளைக் கடத்த முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளனர் அந்த 2 பேர். கண்ணதாசனும், இளையராஜாவும் தான். ரிஷிமூலம் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். மகேந்திரன் கதை வசனம் எழுதியுள்ளார். சிவாஜி, கே.ஆர்.விஜயா, சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் வாடா என் ராஜாக்கண்ணா என்ற பாடல் தான் அது. இந்தப் பாடலில் என்ன சூழ்நிலை என்றால், சிவாஜி எஸ்.பி.யாக இருப்பார்.

ஒரு குழந்தை இருக்கும். மனைவி கே.ஆர்.விஜயாவை ஒரு சூழலில் பிரிந்து விடுவார். அப்போது ஒரு அனாதைப் பெண் இவரிடம் அடைக்கலமாகிறாள். அந்தக் குழந்தை தனியாக இருக்கிறதே. இவரது மனைவி இறந்து விட்டாள் போல என்று அந்த அனாதைப் பெண் நினைத்துக் கொள்கிறாள். அதனால் அந்தக் குழந்தையைப் பிரியமுடன் வளர்க்கிறாள்.

இவரும் தனியாகக் கஷ்டப்படுகிறாரே, நாம் இவரைத் திருமணம் செய்து கொண்டால் நமது வாழ்க்கையும் நல்லா இருக்கும். அவரு வாழ்க்கையும் நல்லா இருக்குமே என்ற எண்ணமும் அவளுக்கு ஏற்படுகிறது. இந்தப் பெண் குழந்தையைக் கொண்டாடுகிறாள். அதே நேரத்தில் தனது காதலை இந்தக் குழந்தையின் மூலமாக சிவாஜிக்குத் தூதும் விடுகிறாள்.

நம்ம 3 பேரும் சேர்ந்தால் வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும் என்றும் பாடுகிறாள். இன்னொரு விசேஷமும் இந்தப் பாடலில் உள்ளது. இந்தப் பாடல் எங்கு படமாக்கப்பட்டதோ, அந்தப் பகுதிக்கான அன்பையும் பாடலில் கொண்டு வந்துள்ளார்கள். இப்படி பல கோணங்களில் உருவான ஒரு வித்தியாசமான பாடல் இது. சைலஜா பாடியிருப்பார். இவர் பல உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார்.

Rishimoolam
Rishimoolam

அதே போலத் தான் இளையராஜாவும் பல உணர்வுகளையும் இசையில் கடத்தி இருப்பார். முதல் இடை இசையில் அந்தப் பெண்ணின் காமத்தைக் கடத்தியிருப்பார். இந்தப் பாடல் படமாக்கப்பட்ட மலைப்பகுதிக்கேற்ற இசையை 2வது இடையிசையில் போட்டு அசத்தியிருப்பார்.

கண்ணதாசன் தன் பங்கிற்குப் பாடல் வரிகளில் வித்தியாசத்தைக் காட்டியிருப்பார். வாடா என் ராஜாக்கண்ணா, தாயும் இங்கே, தந்தை இங்கே. யாரும் பெற்றால் தானா பிள்ளை கண்ணா…

மன்னனைப் போல் தந்தை பக்கம் ராணி இல்லை. கண்ணனைப் போல் தேவன் பக்கம் ராதை இல்லை என தன் மனதில் உள்ள ஆதங்கத்தை சொல்லியிருப்பார். ஏழைக் கனவே காலம் வருமா… என்றாவது வந்தால் அதைக் கொண்டாடிடும் நெஞ்சம்… என்று அழகாகப் போட்டு இருப்பார். 2 பேருக்கும் திருமணமானால் குழந்தையிடம் இவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்.

வானில் நிலவாய் நானே இருந்தால் என் வாழ்விலும் உன் வாழ்விலும் அவர் வாழ்விலும் இன்பம்… இந்தப் பாடலில் 2 பேர் சேர்ந்து நாடகம் நடத்த சிவாஜியின் நடிப்பையும் பற்றி சொல்லவும் வேண்டுமா… இப்படி ஒரு வெரைட்டியான பாடல் அந்தக் காலத்திலேயே வந்துள்ள அற்புதமான மாறுபட்ட பாடல்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...