ஆத்தி!.. 70 கோடி வசூலை தாண்டிய கில்லி!.. தமிழ் சினிமாவை நிர்கதியில் விட்டுட்டுப் போயிடுவாரா தளபதி?

தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் இதுவரை ஒட்டுமொத்தமாக 70 கோடி வசூலை கடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கில்லி ரீ ரிலீஸ் வசூல் சாதனை:

கில்லி திரைப்படம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பலமுறை சன் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியை தெறிக்க விட்டு வந்த கில்லி திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் தியேட்டர்களையும் தெறிக்க விட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ரசிகர்கள் எப்படி கில்லி படத்தை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனரோ அதேபோல லண்டன், நியூயார்க் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விஜய் ரசிகர்கள் கில்லி படத்தை வெறித்தனமாக பார்த்து வருகின்றனர்.

இதுவரை கில்லி இது ரிலீஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் தெரிவித்துள்ளார். மேலும் உலக அளவில் ஒட்டுமொத்தமாக கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் 20 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக கூறுகின்றனர்.

70 கோடி வசூல்:

20 ஆண்டுகளுக்கு முன்னதாக கில்லி திரைப்படம் வெளியாகி 50 கோடி ரூபாய் வசூலை கடந்து இருந்ததாக சொல்லப்படும் நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக 70 கோடி வசூலை கில்லி திரைப்படம் தாண்டி இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த வாரம் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், கில்லி படத்தின் விஜய் ரசிகர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என வாரம் விடுமுறைகளில் பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சமீபத்தில் ரிலீஸ் ஆன எந்த ஒரு படத்துக்கும் இந்த அளவுக்கு கலெக்ஷன் வரவில்லை என விநியோகஸ்தர் சக்திவேலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் நேரில் சந்தித்து கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வெற்றிக்காக மாலை அணிவித்து பாராட்டினார். கில்லி இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வருடத்திற்கு ஒரு படமாவது நடிகர் விஜய் நடிக்க வேண்டும் என சக்திவேலன் கேட்டுக்கொண்ட நிலையில், சரி சரி என தளபதி விஜய் சொல்லியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்துள்ள விஜய் கடைசியாக தளபதி 69-வது படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியல் தலைவராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பம் தளபதி விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான் எனக் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...