இது இல்லாமல் வெளியே தலை காட்டாத எம்.ஜி.ஆர். வெள்ளை தொப்பி ரகசியம் இதானா?

நம்மில் பெரும்பாலானோருக்கு நமது உருவத்தைக் காட்டிலும் நாம் பயன்படுத்தும் பொருட்களே நம்மை அடையாளப்படுத்துகின்றன. பாரதிக்கு தலைப்பாகை முண்டாசு, நேருவுக்கு தொப்பி, காந்திக்கு கைத்தடி என அனைவருக்கும் ஏதேனும் ஒரு பொருள் அடையாளமாக உள்ளது. ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அவர் அணிந்திருக்கும் தொப்பியே பின்னாளில் அவரின் அடையாளமாகிப் போனது. பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளில் தொப்பியுடனே எம்.ஜி.ஆர் கலந்து கொள்வார்.

இந்தப் தொப்பி இவருக்கு வந்தது குறித்து ஒரு சுவராஸ்ய நிகழ்வு உண்டு. அப்போது அடிமைப்பெண் திரைப்படம் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். இந்தியாவின் பாலைவன மாநிலமாம் ராஜஸ்தானில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் வெயில் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர் களைத்துப் போயிருந்தாராம். இதனைக் கண்ட ரசிகர் ஒருவர் எம்.ஜி.ஆருக்கு தொப்பி ஒன்றை அளித்து இதைப் போட்டுக்கோங்க நல்லாயிருக்கும் என்று கூற எம்.ஜி.ஆரும் ரசிகரின் அன்புப் பரிசை ஏற்று அதை அணிந்து கொண்டார்.

அம்மா வேடமா.. இவங்களையெல்லாம் அடிச்சுக்க வேற ஆளே இல்ல..!

எம்.ஜி.ஆருக்கு இந்தத் தொப்பி பிடித்துப் போகவே தொடர்ந்து அதை அணிந்து வந்தார். பின்னாளில் அதுவே பழக்கமாகிப் போக தான் வெளியே செல்லும் போதெல்லாம் அதே போன்று வெள்ளைத் தொப்பிகளை விதவிதமாக அணிந்து சென்றார். ஆரம்பத்தில் விமர்சனங்களுக்கு உள்ளானாலும் பின் மக்களும் இவரின் தொப்பியை ரசிக்கவே அதுவே அவருக்கு நிரந்தர அடையாளமாகிப் போனது.

எம்ஜிஆர்-க்கு மிகவும் பிடித்துப்போன இந்த தொப்பியை ரசாக் எனும் தொப்பி தயாரிப்பாளர் பிரத்யேகமாக தயாரித்து தர துவங்கினார். இறுதி காலம் வரை இவர் தான் எம்ஜிஆர்-க்கு தொப்பி தயாரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொப்பியானது செம்மறி ஆட்டின் முடிகளை பதப்படுத்தி அதனுள் மூன்று அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைத்து ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது இந்த தொப்பி. காற்று உள்ளே செல்லவும், வியர்வை தங்காமல் இருக்கவும் சிறு சிறு துவாரங்கள் இடம் பெற்றிருந்தன.

இவ்வாறு கருப்புக்கண்ணாடியும், வெள்ளைத் தொப்பியும் எம்.ஜி.ஆர் மிகவும் ரசித்து அணிந்து கொண்டார். தன்னுடைய மறைவின் போது கூட தனது ஆஸ்தான தொப்பி மற்றும் கருப்புக் கண்ணாடி கொண்டே அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...