சினிமாவின் எல்லா துறையிலும் சிக்ஸர் அடித்தவர்.. இவரு நடிக்காத கதாபாத்திரமே இல்ல..

பிரபல மலையாள நடிகரான பிரதாப் சந்திரன் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்தவர். அவர் நடிகராக மட்டுமின்றி கதாசிரியர், டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி நடிகர் என பல்வேறு அவதாரங்களிலும் ஜொலித்துள்ளார்.

நடிகர் பிரதாப் சந்திரன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அங்கே பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் கோவளம் மற்றும் சென்னைக்கு அவரது குடும்பம் மாறியது. சிறுவயதிலேயே அவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆசை காரணமாக திரையுலகில் நுழைய முயற்சி செய்தார்.

முதலில் அவர் ரேடியோ நாடகத்தில் நடித்த நிலையில் அதன் பின்னர் கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் முதலாக மலையாள திரைப்படத்தில் நடித்தார். கடந்த 70களில் அவர் ஏராளமான மலையாள திரைப்படங்கள் நடித்துள்ள நிலையில், அவரது படங்கள் பல சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.

பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் உட்பட பலருடன் இணைந்து பிரதாப் சந்திரன் நடித்துள்ளார். திரைப்படங்களில் பொதுவாக குணசித்திர கேரக்டர், அப்பா கேரக்டர், போலீஸ் கேரக்டர், வில்லன் கேரக்டர் என அவர் நடிக்காத கேரக்டரே இல்லை என்று சொல்லலாம்.

prathapachandran1

மலையாளத்தில் கிட்டத்தட்ட 300 படங்கள் நடித்திருந்த நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரதாப் சந்திரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்ததாக ரஜினியின் துடிக்கும் கரங்கள் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக நடித்தார்.

அதன் பின்னர் ஒரு ஓடையின் நதியாகிறது, உதய கீதம், விக்ரம், குளிர்கால மேகங்கள், நாயகன், மௌனம் சம்மதம், நடிகன், கற்பூர முல்லை, நண்பர்கள், தங்க தாமரைகள் உள்பட பல படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான மன்னன் திரைப்படத்தில் அவர் ராகவன் என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார். மீண்டும் ரஜினியின் பாண்டியன், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், ரஜினியின் உழைப்பாளி, சத்யராஜ் நடித்த மலபார் போலீஸ் போன்ற படங்களில் நடித்தார். இது போக சில படங்களை அவர் சொந்தமாக தயாரிக்கவும் செய்துள்ளார்.

மேலும் சில படங்களுக்கு கதாசிரியராக இருந்த பிரதாப் சந்திரன், டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக நம்பியார் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோரின் படங்கள் மலையாளத்தில் டப் ஆகும் போது இவர் தான் குரல் கொடுத்திருப்பார். இது தவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள பிரதாப் சந்திரன், கடந்த  2004 ஆம் ஆண்டு காலமானார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.