கமலுக்கு சைலண்ட் காட்டிய இளையராஜா ரஜினி விஷயத்தில் மட்டும் நோட்டீஸ்..! நடப்பது என்ன?

இந்தியன் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் படம் ரிலீஸ். ஆனால் இன்னும் ஒரு அப்டேட்டும் இல்லையே என ரசிகர்கள் தவித்து வருகின்றனர். அவர்களின் குறையைப் போக்க இந்த மாதம் முழுவதும் அப்டேட்டுகள் வரிசை கட்டி வரத் தயாராக உள்ளன.

இந்தியன் 2 படத்திற்கான புரொமோஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. விரைவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லாஞ்ச் நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு ராம்சரண், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Koolie
Koolie

தொடர்ந்து ஜூன் 13ல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் உள்பட அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வர உள்ளன. கமலுக்கும் இளையராஜாவுக்கும் தகராறு என்று சொல்கிறார்கள்.

அது வேறு ஒன்றும் இல்லை. ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் டீசரில் டி ஐ டிஸ்கோ என்ற இளையராஜாவின் பாடல் வரிகள் வரும். அது இளையராஜா ரஜினிக்காக தங்கமகன் படத்தில் போட்ட டியூன். 40 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ப்ரஷாக உள்ளது.

அதனால் இளையராஜா படத்தைத் தயாரித்து வரும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்துள்ளார். ரஜினிக்கே இந்த நிலைமையா என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அதே லட்டரில் இளையராஜா விக்ரம் படத்திற்கும் எனது பாடலை உபயோகப்படுத்தி யுள்ளார்கள் என்று எழுதி இருக்கிறார்.

அதனால் கமல் விஷயத்தில் பிரச்சனையைக் கிளப்பாத இளையராஜா ரஜினி விஷயத்தில் மட்டும் பிரச்சனையைக் கிளப்பியது ஏன் என்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Vikram
Vikram

இந்த நிலையில் ரஜினி என்ன பதில் சொல்வார்? சன் பிக்சர்ஸ் தரப்பு என்ன செய்யப்போகிறது? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரஜினியின் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தான் கமலின் விக்ரம் படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலும் இளையராஜாவும் நல்ல நண்பர்கள். அதே போல இளையராஜாவும், ரஜினியும் ஆன்மிகவாதிகள். அந்த வகையில் ரஜினியின் தங்கமகன் படத்திற்குப் பிறகு அவருக்கு இளையராஜா இசை அமைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews